சூட்டு கொப்பளம் பழுத்து உடைய இதை ட்ரை பண்ணுங்க | Suttu Koppalam Remedy in Tamil

சூட்டு கொப்பளம் குணமாக | Suttu Koppalam Treatment tamil

வெயில் காலம் வந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரும். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சையாக உணவு வகைகளை உட்கொண்டு உடலை  கவனமாக பார்த்துக்கொள்வோம். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் நிச்சயமாக உடலில் அலர்ஜி, நீர்க்கடுப்பு , பரு, சூட்டு கொப்பளம்  இன்னும் பல்வேறு பிரச்சனைகள் வரும்.

சூட்டு கொப்பளம் வந்தால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. கொப்பளம் வருவதோடு இல்லாமல் காய்ச்சல், வலி போன்றவற்றை  உண்டாக்கும். அது மட்டுமில்லாமல் நம்மால் இயல்பாக வேலை செய்ய முடியாது. இந்த அளவுக்கு பிரச்சனையை தர கூடிய சூட்டு கொப்பளத்திற்கான தீர்வை பொதுநலம்.காமில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

முகத்தில் கரும்புள்ளி மறைய டிப்ஸ்

சூட்டு கொப்பளம் என்ன:

Suttu Koppalam Treatment tamil

 • சூட்டு கொப்பளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும். இந்த இடத்தில் தான் வரும் என்று வரைமுறை இல்லை. உடம்பில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சூட்டு கொப்பளம் வரும்.
 • பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு வியர்வை அதிகமாக காணப்படும். இந்த வியர்வை தேங்குமிடமெல்லாம் அரிக்கும். அதை நாம் சொரியும் போது ஒவ்வாமை ஏற்படும். அது கொஞ்ச நேரத்திலே சிவந்த நிறத்தில் காணப்படும். இப்படி தான் சூட்டு கொப்பளம் வர ஆரம்பிக்கிறது.

தேவையான பொருட்கள்:

உடலில் உள்ள கொப்பளம் மறைய நிறைய மருந்து, மாத்திரைகளை  சாப்பிட்டு அதன் பின் விளைவுகளையும் பார்த்து இருப்பீர்கள். ஒவ்வொரு பிரச்சனையையும் நாம் அதனை சிறிதாக இருக்கும்போதே தெரிந்துகொண்டால் அதை பெரியதாகமல் அதற்கேற்ற வைத்தியத்தை செய்திருக்காலம். நாம் விட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம் உணவே மருந்து என்பார்கள் அது போல் வீட்டில் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும் நம் உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைக்கும் தீர்வு தரும் அந்த வகையில் இன்று வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து சூடு கொப்பளம் நீங்குவதற்கு வழிகளை பார்ப்போம்  வாங்க..!

Suttu Koppalam Treatment tamil

 • மஞ்சள்
 • கற்றாழை
 • சந்தனம்
 • தயிர்

இந்த நான்கு  பொருட்களை வைத்து கோடைகாலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளத்தை குணமாக்குவது பற்றி  தெளிவாக பார்ப்போம்.

சூட்டு கொப்பளம் மருந்து:

Suttu Koppalam Treatment tamil

 • இயல்பாகவே கற்றாழை, சந்தனம்  குளிர்ச்சி தன்மையை கொண்டது.
 • மஞ்சள் தூள் ஆன்டி-பாக்டிரியல் தன்மையை கொண்டது. அதனால் தான் பெரியவர்கள் உடலில் தேய்த்து குளிக்க சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல் நாம் சமைக்கும் உணவுகள் அனைத்திலும் மஞ்சத் தூள் சேர்ப்போம்.
 • தயிரில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
 • இந்த நான்குமே நம் வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடியது. பேஸ்டாக செய்து சூட்டு கொப்பளம் உள்ள இடத்தில் வைத்தால் சூட்டு கொப்பளம் மறைந்து போகும்.

 பேஸ்ட் செய்வது எப்படி:

Suttu Koppalam Treatment tamil

 • முதலில் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சந்தனம் அதோடு கற்றாழை ஜெல், 1/2 ஸ்பூன் தயிர் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
 • அதன் பிறகு எடுத்துவைத்திருக்கின்ற பொருட்களை நன்றாக சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
 • மிக்ஸ் செய்த பிறகு அதோடு கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

Suttu Koppalam Treatment tamil

 • உடம்பில் சூட்டு கொப்பளம் எந்த இடத்தில் இருக்கிறதோ அங்கு  கற்றாழை சந்தனம் பேஸ்ட்டை  தடவுங்கள்.
 • இந்த மாதிரி சூட்டு கொப்பளம் இருக்கும் இடத்தில் தடவினால் பழுத்து உடைந்து தழும்புகள் இல்லாமல் இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips  in Tamil