மஞ்சள் காமாலை இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று தெரியுமா..?

மஞ்சள் காமாலை அறிகுறிகள்

மஞ்சள் காமாலை இருந்தால் தோன்றும் அறிகுறிகள் 

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம் ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி பார்க்கப்போகிறோம். மஞ்சள் காமாலை இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். மஞ்சள் காமாலை நோய் இருப்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். நகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தாலோ, அல்லது சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தாலோ மஞ்சள் காமாலை இருப்பதை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை இருந்தால் வேற என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்: 

உடலில் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அழிந்து அவை பிலிரூபின் என்ற நிறப்பொருளாக உடம்பில் உற்பத்தி ஆகிறது. இந்த பிலிரூபின் இரத்தத்தின் வழியே பித்தநீர் மூலம் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் இந்த பிலிரூபின் உடலிலேயே தங்கி விடும். இதனால், உடலிலுள்ள உறுப்புகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ மஞ்சள் காமாலை குணமாக வீட்டு வைத்தியம்

மஞ்சள் காமாலை என்பது அடைப்பு காமாலை மற்றும் அடைப்பில்லா காமாலை என்று 2 வகை உள்ளது. அடைப்பு காமாலை கணைய கோளாறுகள், பித்த குழாய் கற்கள் மற்றும் பித்தக்குழாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அடைப்பில்லா காமாலை டைபாய்டு, பாக்டீரியாக்கள் மற்றும் மலேரியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கல்லீரலை தாக்கும் பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். எந்த அறிகுறியாக இருந்தாலும் அதற்கு சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

  • கண்கள் மற்றும் சருமம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • வயிற்றின் வலது பகுதியிலும் அல்லது கீழ் பகுதியிலும் கடுமையான வலி ஏற்படும்.
  • குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் ஆகும். எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் வாந்தி ஏற்படும்.
  • மஞ்சள் காமாலை இருந்தால் பசி உணர்வு இருக்காது. மேலும், தலைவலி கடுமையாக இருக்கும்.
மஞ்சகாமாலை உணவு முறை
  • மஞ்சள் காமாலை இருந்தால் உடல் சோர்வு உடல் முழுவதும் வலி மற்றும் குடல் வீக்கம், மூட்டு வலி,   இடைவிடாத காய்ச்சல், எடை இழப்பு, இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
  • அதிகமாக மதுபானம் அருந்துபவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • மஞ்சள் காமாலை இருந்தால் சீறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறும்.
  • மஞ்சள் காமாலை இருந்தால் கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியும் மஞ்சள் நிறமாக இருக்கும்.

குறிப்பு:  இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil