இதெல்லாம் கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்..! Symptoms of Liver Problem in Tamil..!

கல்லீரல் பாதிப்பின் அறிகுறி..! Symptoms of Liver Problem in Tamil..!

Symptoms of Liver Problem in Tamil:- நம் உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பு எதுவென்றால் கல்லீரல் என்று சொல்லலாம். உள்ளுறுப்புகளில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டதும், தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் உடையது கல்லீரல் தான். கல்லீரல் நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைவதற்கு தேவையான வையில் என்னும் மிக முக்கியமான நொதியை சுரக்கின்றது. கல்லீரல் நாம் சாப்பிட்ட உணவுகளில் உள்ள சத்துக்களை சேமித்து வைக்கும் இடமாகவும், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம் போன்ற முக்கிய சத்துக்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் அமைந்துள்ளது. மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மற்றும் இரத்தம் உரைத்தல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது.

இத்தகைய கல்லீரல் மாறிவரும் உணவு பழக்கம், கட்டுப்பாடு இல்லாத குடி பழக்கம், மரபியல் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரலில் நீர் கோர்ப்பது, கல்லீரலில் கொழுப்பு கட்டிகள், கல்லீரலில் கிருமிகள் தாக்குவது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கல்லீரல் சுமார் 70% பாதிப்பு அடையும் வரை எந்த ஒரு அறிகுறிகளையும் காட்டாது. இதன் காரணமாகவே கல்லீரல் சார்ந்த நோய்களை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

சரி இந்த பதிவில் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் (Symptoms of Liver Problem in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்..! Early Symptoms of Liver Disease

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள் – வயிறு வீக்கம்:

Abdominal distension

பொதுவாக கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது கல்லீரல் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. கல்லீரல் பணிகளில் மிகவும் முக்கிய பணிகளான இரத்தம் உறைவதற்கு Albumin என்னும் புரதத்தை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்புமின் உடலில் குறையும்பொழுது உடலில் அதிக நீர் உற்பத்தியாகும். இந்த நீர் வயிறு மற்றும் கால் பகுதிகளில் தேங்கி வீக்கங்களை ஏற்படும். எனவே தங்களுக்கு வயிறு அல்லது கால் பகுதிகளில் வீக்கம் ஏற்படுகிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.

வாய் கசப்பு:-

வாய் கசப்பு

கல்லீரல் உணவு செரிமானத்திற்கு தேவையான பையில் என்னும் பித்த நீரை சுரக்கின்றது. கல்லீரல் பாதிப்படையும்பொழுது அளவுக்கு அதிகமான பித்தநீர் சுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பித்த நீர் மிகவும் கசப்பு சுவையுடையது, இந்த பித்த நீர் செரிமான உறுப்புகளில் அதிகம் தேங்கி இருக்கும்பொழுது வாய் கசப்பு தன்மையாக இருக்கும். இவ்வாறு வாய் கசப்பு தன்மையானது மாதக்கணக்கில் இருந்தால் தாங்கள் கட்டாயமாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

தொடர் வாந்தி மற்றும் பேதி:-

தொடர் வாந்தி

கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது செரிமான உறுப்புகளின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஏனென்றால் செரிமானத்திற்கு தேவைப்படும் பல நொதிகள் கல்லீரலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தான் பசியின்மை, தொடர் வாந்தி, பேதி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற அறிகுறிகள் தங்களுக்கு இருக்கிறது என்றால் தங்களுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். எனவே இதனை அலட்சியம் செய்யாமல் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லதாகும்.

மஞ்சள் காமாலை:-

Jaundice

கல்லீரல் hepatitis virus  என்னும் வைரஸ் கிருமியினால் பாதிக்கப்படும்பொழுது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக கல்லீரலில் சுரக்கும் பித்த நீர் கல்லீரலிலேயே தேங்கிவிடுகிறது. இந்த விளைவாக கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும், கைகள் மற்றும் கால்களில் உள்ள நகங்கள் மஞ்சள் நேரத்தில் காணப்படுவது, மற்றும் தோல் பகுதி மஞ்சள் நிறமாக காணப்படும். அதேபோல் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவையெல்லாம் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

சரும அரிப்பு:-

சரும அரிப்பு

கல்லீரல் பாதிப்படையும் பொழுது உடல் வளர்ச்சிதை மாற்றத்தினால் உண்டாகக்கூடிய கழிவுகள் மற்றும் கல்லீரலில் உண்டாகக்கூடிய பித்த உப்புகள் உடலிலேயே தேங்க ஆரம்பித்துவிடும். இதன் விளைவாக சருமத்தில் தடிப்பு, சரும அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil