தேங்காய் தண்ணீர் நன்மைகள்
அனைத்து Pothunalam.com நண்பர்களுக்கும் வணக்கம். பெரிய வணக்கமாக இருக்கலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் ஏனென்றால் வீட்டில் அதிகமாக அவர்கள் தான் தேங்காயை உடைத்து தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு சமையலுக்கு பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் இனி அது போல் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம். பெண்கள் மட்டும் தான் சமையல் செய்வார்கள் என்று சொல்லவில்லை சமையல் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பதிவானது உதவியாக இருக்கும்.
உடல் வறட்சி நீங்க:
தேங்காய் என்றாலே சிலருக்கு மிகவும் பயம் ஏனென்றால் தேங்காய் என்றால் கொலஸ்டரால் என்று பயந்து அதனை சாப்பிட மறுத்துவிடுவார்கள். ஆனால் தினமும் தேங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேங்காய் தண்ணீர் குடித்தால் அதிலிருந்து உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
அதில் முக்கியமாக இருப்பது உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் கிடைக்கும். ஆதலால் தினமும் ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் குடிக்கலாம்.
பசியை கட்டுப்படுத்த:
சிலருக்கு அதிகமாக பசி எடுக்கும் ஆதலால் அவர்கள் அதிகம் உணவை எடுத்துக்கொள்வார்கள். ஆகையால் உடல் எடை அதிகரிக்கலாம், கொழுப்புகள் அதிகரிக்கும். அதனை தடுக்க தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் பசியை கட்டுப்படுத்தும் உடலையும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். கொழுப்புகளையும் அதிகரிக்காமல் தடுக்க முடிகிறது.
செரிமான சக்தியை அதிகரிக்க:
எந்த உணவு பொருட்களை உட்கொண்டாலும் உடலில் எதுக்களிப்பு, நெஞ்சில் நிற்பது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அதாவது 7 நாட்களும் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் வாயு தொல்லை மற்றும் செரிமான கோளாறுகள் வராது.
உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய:
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் தேங்காய் தண்ணீர் பருகுவதால் உடலின் electrolytes-களை சரியாக மாற்றி சீராக இயக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தைராய்டு குணமாக எளிய வழிகள்:
தினமும் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஆற்றலையும், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகமாக்கி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
தேங்காய் பாலின் தீமைகளை தெரிந்துகொள்ள ⇒ படித்துவிடுங்கள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Health Tips In Tamil |