தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்..!
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான ஒரு தகவல் பற்றித்தான் பார்க்க போகின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் ஒரு தாவரத்தில் உள்ள சக்தி மற்றும் பயன்கள் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது என்ன தாவரம் என்றால் தொட்டால் சிணுங்கி செடித்தான்.
நாம் அனைவரும் சிறுவயதில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை தொட்டு தொட்டு விளையாடிருப்போம். அப்படி விளையாடும் பொழுது இந்த செடியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக கூறப்பட்டுள்ளது இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள்:
இந்த தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள் தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.
தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்:

பொதுவாக கிராமப்புறத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை பார்க்கலாம். இதன் பெயருக்கு ஏற்ப இதனை தொட்டீர்கள் என்றால் அதனுடைய இலைகள் சுருங்கி விடும். இதற்கு காரணம் அதனுடைய தண்டுப்பகுதியில் உள்ள ஒரு விதமான அமிலம் தான்.
இந்த தொட்டால் சிணுங்கி செடியை நமது வீட்டில் வளர்த்தால் மிகுந்த நன்மைகளை இந்த செடியிலிருந்து நாம் பெறலாம். இதில் உள்ள காந்த சக்தி நமது வீட்டிற்கும் நமக்கும் மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 03.30 – 05.30 மணி வரை உள்ள நேரத்தில் தொட்டால் சிணுங்கி செடியின் மீது நமது இரண்டு கைகளையும் வைத்து தினமும் தொட்டு வருவதால் நமது உடலில் உள்ள காந்த ஆற்றல் அதிகரிக்கும்.
அப்படி இந்த காந்த ஆற்றல் அதிகரிப்பதால் நமக்கு வருங்காலத்தை கணித்து கூறக்கூடிய ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் நிலவுகின்ற சண்டைகள் இல்லாமல் இருக்கும்.
தொட்டால் சிணுங்கி எங்கே கிடைக்கும்:
எங்கெல்லாம் ஈரப்பதம் நிறைந்திருக்கிறதோ, அங்கெல்லாம் தாராளமாக வளரக்கூடியது, இந்த செடிகள். சின்னச் சின்ன முட்களும், ஊதா கலர் பூக்களும் நிறைந்திருக்கும். மாலை நேரம் ஆகிவிட்டால், இந்த செடியின் இலைகள் தானாகவே மூடிக் கொள்ளுமாம். அதேபோல, யாராவது விரல்களில் தொட்டாலும், மூடிக் கொள்ளும்.. அதேபோல, சிறு அதிர்வு வந்தாலும், மறுபடியும், இலைகளை மூடிக் கொள்ளுமாம்.
தொட்டால் சிணுங்கி செடியின் மருத்துவ குணங்கள்:

இந்த தொட்டால் சிணுங்கி செடியை கசாயம்போல் செய்து பருகி வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. முதலில் இந்த தொட்டால் சிணுங்கி கசாயம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- தொட்டால் சிணுங்கி – 1 கைப்பிடி அளவு
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 6
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் – 1/4 லிட்டர்
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 கைப்பிடி அளவு தொட்டால் சிணுங்கியை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி அதனை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த தொட்டால் சிணுங்கியை சேர்த்து அதனுடன் 1/4 லி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் எடுத்துவைத்திருந்த மிளகை நன்கு பொடியாக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு கொதிக்கவைத்து பிறகு வடிக்கட்டி பருக வேண்டும்.
இந்த தொட்டால் சிணுங்கி கஷாயத்தை வாரம் இருமுறை பருகுவதால் நமது உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடிப்பது நல்ல தீர்வை தரும். மேலும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கஷாயம் ஒரு சிறந்த மருந்தாகும்.
தொட்டால் சிணுங்கி பயன்கள்:
நம்முடைய தோல்களில் ஏற்படும் தேமல், படை போன்ற பிரச்சனைக்கு இந்த இலைகளின் சாற்றை அதன் மேல் தடவி வந்தால் விரைவில் தோல் பிரச்னை சரியாக கூடும்.
பெண்களுக்கு மாதவிட நேரத்தில் அதிகமாக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி பிரச்சனை இருந்தால் தொட்டால் சிணுங்கி இலையை பறித்து, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை மோரில் கலந்து குடித்து வந்தாலே சரியாகிவிடும்.
இந்த இலையை அரைத்து பசும்பாலில் 15 கிராம் சேர்த்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடுகள் நீங்கும். அதே போல உடல்சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகள், சிறுநீர்கடுப்பு, மூலநோய், வயிறு எரிச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தொட்டால் சிணுங்கி நல்ல பலனை தருகிறது.
இந்த செடியின் வேர் மட்டும் எடுத்துஅதில் தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்ட கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். இதனை தினமும் 3 வேளை அரை அவுன்ஸ் குடித்து வந்தாலும் சிறுநீர் கடுப்பு தீரும். அடைப்பட்ட சிறுநீரும் முழுவதுமாக வெளியேறும்.
ஆமணக்கு இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














