தைராய்டு இருந்தால் என்ன சாப்பிட கூடாது | Thyroid Avoid Foods in Tamil

Thyroid Normal Value in Tamil

தைராய்டு நார்மல் அளவு | Thyroid Normal Value in Tamil

இன்றைக்கு அதிகரித்து வரும் நோய்களில் தைராய்டு ஒன்றாகும். ஆண்கள், பெண்கள் என்று அனைத்து வயதினரையும் பாதிக்கின்றது. முக்கியமாக பெண்கள் பயப்படக்கூடிய நோய்களில் ஒன்று தைராய்டு. தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிஸம் என்றும், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக தைராய்டு பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றது. தைராய்டு சுரப்பியை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது கடினம். இதன் பிரச்சனை அதிகரிக்கும் போது தான் கழுத்தின் முன் பகுதியில் ஒரு வட்டமான கட்டி போல் தெரியும். இந்த நோயினை சில உணவு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். அது என்னென்ன உணவு முறை என்பதை பார்க்கலாமா.!

தைராய்டு அறிகுறிகள்:       

  • மலசிக்கல்
  • உடல் எடை குறையும் அல்லது அதிகரிக்கும்
  • சோம்பேறியாக இருத்தல்
  • முடி உதிர்தல்
  • உடல் மற்றும் மன வளர்ச்சி ஏற்படாமல் இருப்பது
  • உடல் குளிர்ந்த நிலையில் இருப்பது
  • பதற்ற நிலையில் காணப்படுவது.
தைராய்டு முற்றிலும் குணமாக 10 ஆரோக்கிய உணவுகள்

தைராய்டு நார்மல் அளவு:

T3, T4, Tsh Normal Range  
Types Of Harmone  Noraml Range 
Tsh  0.5 – 4.5 mIU/ L 
Total T3 5.4 – 11.5 mcg/ dl 
Total T4 80 – 220 ng/ dl 

தைராய்டு வர காரணம்:

Thyroid Avoid Foods in Tamil

நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, மன அழுத்தம் மற்றும் ஜீன் சம்பந்தமான குறைபாடுகள் போன்றவை தைராய்டு வருவதற்கு காரணமாக இருக்கின்றது.

தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

மனிதர்கள் ஆகிய நாம் உணவுகளை பிடித்த உணவுகள், பிடிக்காத உணவுகள் என்று தான் பிரித்திருப்போம். சில மனிதர்கள் பாகுபாடு இல்லாமல் எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள். ஆனால ஆரோக்கியம் குறைந்த நிலையில் உள்ளவர்கள் சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்று தவிர்த்திருப்பார்கள். அப்படி தான் தைராய்டு நோய் உள்ளவர்களும் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அது என்னென்ன உணவுகள் என்பதை காண்போம்.

பாஸ்ட் புட்: 

Thyroid Normal Value in Tamil

இன்றைய அவசர கால கட்டத்தில் பாஸ்ட் புட் முக்கியமானதாக விளங்குகிறது. பாஸ்ட் புட்டில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால், முக்கியமாக தைராய்டு உள்ளவர்கள் கொஞ்சமாக உட்கொண்டாலும் அது தைராக்சின் ஹார்மோன்களின் பயன்பாட்டில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதே சமயத்தில் பாஸ்ட் புட்டில் அதிக அளவு உப்பு உபயோகப் படுத்தப் பட்டிருந்தாலும் அது போதுமான அளவு அயோடின் சத்து நிறைந்ததாக இருக்காது. அதனால் தைராய்டு உள்ளவர்கள் சிறிது உட்கொண்டாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

துரித உணவுகள்:

துரித உணவு என்றால் சிலருக்கு தெரியாது. அது என்னென்னவென்றால் புரதம், வைட்டமின், கனிம சத்துக்கள் போன்றவை குறைந்த அளவு அல்லது அளவுக்கு மிகுந்த உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை துரித உணவுகள் என்று அழைக்கப்படுகிறது.

துரித உணவுகளில் அதிக அளவு சோடியம் சேர்ந்திருப்பதால் உயர் ரத்த அழுத்தம் மற்றும்  இதய பிரச்சனை ஏற்படுத்துவதுடன் அயோடின் அளவையும் குறைத்து விடுகிறது.

சல்பர் தீமைகள்:

சோளம், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் இருப்பதால் இந்த உணவு பொருட்களில் தைராய்டு சுரப்பியால் அயோடினை உட்கொள்ள முடியாது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.

முட்டைகோஸ் தீமைகள்: 

Thyroid Normal Value in Tamil

முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தைராய்டு நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எதனால் என்றால் முட்டைகோஸ், காலிபிளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளில் அயோடின் உட்கொள்வதை பாதித்து ஹார்மோன்களில் பாகுபாடு உண்டாக்கும். எனவே இது மாதிரியான காய்கறிகளை தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள உணவுகளை தைராய்டு உள்ளவர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கும்போது தைராய்டு நோயை வெல்லலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil