நாக்கின் நிறம் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை காட்டுகிறது தெரியுமா?

tongue colour symptoms in tamil

நாக்கு மற்றும் நாக்கின் நிறம் பற்றிய தகவல்கள்

வணக்கம் நண்பர்களே.  இன்று நம் பதிவில் நாக்கின் நிறத்தை கொண்டு என்ன நோய் இருக்கிறது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நாம் உண்ணும் உணவின் வாசனையை நுகர்வது வேண்டுமானால் மூக்காக இருக்கலாம். ஆனால் நாக்கு தான் அந்த உணவு என்ன சுவையைக்  கொண்டுள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த உலகில் பிறந்த மனித குலம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மொழிகளை பேசுவதற்கு நாக்கு தான் உதவுகிறது.

நாம் நமது நாக்கை சுத்தமாக வைத்து கொள்வது மிக அவசியம். இல்லையென்றால், வைரஸ் தொற்று மற்றும் பாக்ட்டீரியா போன்ற பூஞ்சை நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நமக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் நாக்கை தான் பார்ப்பார். ஏன் என்று யோசித்திருப்பீர்கள், காரணம் உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தன்மை மற்றும் அதன் வீரியம் குறித்து நாக்கின் மூலம் கண்டறியலாம். அப்படிப்பட்ட நாக்கின் நிறத்தை வைத்து நம் உடலில் என்னென்ன நோய்கள் இருக்கும் என்பதை கண்டறிவோம்.

      குழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா 

நாக்கில் எந்த நிறம் என்ன நோயை குறிக்கிறது?

நம் நாக்கு என்ன நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்து நம் உடம்பில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம்.

நாக்கு வெள்ளையாக இருந்தால்:

tongue colour symptoms in tamil

நாக்கை சுத்தமாக வைத்து கொள்ளாதபோது அல்லது உடம்பில் தீவிர நோய் அறிகுறியின் போது நாக்கு வெள்ளைநிற தோற்றத்தில் இருக்கும். இது நம் வாய்க்குள் இருக்கும் “கேண்டிலா அல்பிகன்ஸ்”என்ற பூஞ்சையின் வளர்ச்சி காரணமாக நோய்கள் உருவாகின்றன. இது நமது உடலின் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் இந்த “கேண்டிலா அல்பிகன்ஸ்கள்”அதிக வளர்ச்சி அடைகின்றன. இதனால் நாக்கில் வெள்ளை நிற திட்டுகள் உருவாகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் குறைகிறது என்று அர்த்தம். “லூக்கோபிளாக்கியா” என்ற புஞ்சையும் இதுபோலத்தான் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். இது வளர்ச்சிபெரும் போது வாய்வழி புற்றுநோயை ஏற்படுத்தும்.

நாக்கில் சிவப்பு புள்ளி:

tongue colour symptoms in tamil

உங்களின் நாக்கு சிவப்பு நிறமாக மாறி இருந்தால் உடலில் போலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-12 குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இந்த வைட்டமின் பி-12 குறைபாடு இருந்தால் நாக்கு சிவப்பாக இருக்கும். இதற்கு அன்றாடம் நாம் உண்ணும் உணவு பழக்கத்தில் வைட்டமின் பி-12 சார்ந்த உணவுகளை  சாப்பிட்டால் இதை தடுக்க முடியும். குளோசிடிஸ் என்ற பூஞ்சையின் காரணமாக நாக்கில் வரைபடம் போன்று சிவப்பாக இருக்கும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் அலர்ஜி அல்லது வைட்டமின் பற்றாக்குறை மற்றும் நீரிழிவு நோயாக கூட இருக்கும்.

        தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாட்டு வைத்தியம்

 

நாக்கு நீல நிறமாக இருக்க காரணம்?

நாக்கு நீல நிறமாக இருக்க காரணம்

நாக்கு நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருந்தால் உடம்பில் பல நோய்களின் அறிகுறிகள் உள்ளது அர்த்தம். இதன்மூலம் இதய பிரச்சனை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதயத்தில் இரத்தஓட்டம் சீராக இல்லையென்றாலும்  அல்லது இதயத்தில் ஆக்சிஜன் குறைய தொடங்கினாலும் நாக்கு நீல நிறமாக மாறும்.

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருக்க காரணம் என்ன?

உடம்பில் நல்ல ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் சில நேரங்களில் நாக்கு மஞ்சள் நிறமாக மாறும். செரிமான கோளாறுகள் அல்லது செரிமான அமைப்பில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் நாக்கு மஞ்சள் நிறமாக மாறும். வயிறு அல்லது கல்லீரலில் பாதிப்பு இருந்தால் நாக்கு மஞ்சள் நிறமாக மாறுகிறது.

நாக்கு ஏன் கறுப்பு நிறத்தில் உள்ளது?

நாக்கு ஏன் கறுப்பு நிறத்தில் உள்ளது

வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சர் போன்ற பிரச்சனைகளின் காரணமாக நாக்கு கறுப்பு நிறமாக மாறுகிறது. நாக்கு கறுப்பு நிறமாக இருந்தால் புற்றுநோய் போன்ற தீவிர நோயின் அறிகுறியாக இருக்கும். மேலும் புகைபிடிப்பவர்களின் நாக்கு கறுப்பு நிறத்தில் மாறிவிடும்.

ஆரோக்கியமான நாக்கு எப்படி இருக்கும்:

ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டு சற்று சொரசொரப்பு தன்மையுடன் இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக்            செய்யவும்—> Health Tips in Tamil