உடல் எடை கிடுகிடுவென குறைய புரதம் நிறைந்த உணவுகள்..! Udal Edai Kuraiya Protein Foods in Tamil..!
Udal Edai Kuraiya Protein Foods in Tamil – இன்றைய மாறிவரும் கால கட்டத்தில் பலர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. ஒருவரது உயரம் மற்றும் வயது ஆகிய இரண்டிற்கும் ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவர்கள் சுறுசுறுப்பாகவும் ஹெல்தியாகவும் இருப்பார்கள். அதுவே உடல் எடை அதிகமாக இருந்தால் அவர்களால் தரையில் அமர்ந்து எழுவதற்கே மிகவும் சிரமம்படுவார்கள். உடல் எடை அதிகரிப்புதான் ஒருவருக்கு உடலில் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுவதற்க்கான முதல் அறிகுறியாகவும். ஆக நாம் தான் நமது உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை மற்றும் தேர்வு செய்து சாப்பிடலாம், மேலும் அன்றாடம் காலை எழுத்தும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்சி செய்வது மிகவும் சிறந்தது. சரி வாங்க உடல் எடை கிடுகிடுவென குறைய புரதம் நிறைந்த உணவுகள் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
அவல் உப்புமா:
அவல் உப்புமாவில் கார்போஹைட்ரைட்டுகள், புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுக்கள் நிறைந்துள்ளது, ஆக இதனை தினமும் காலை உணவாக செய்து சாப்பிடலாம் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் புரதத்தின் உள்ளடக்கத்தை அதிகரிக்க ½ வேர்க்கடை சேர்த்து அவல் உப்புமா தயார் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் கச்சிதமாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடை குறைய நார்ச்சத்து உணவுகள்
பன்னீர் அல்லது முட்டை புர்ஜி (Egg bhurji):
பன்னீர் அல்லது முட்டை புர்ஜி என்பது புரதம் நிறைந்த உணவாகும், ஆக இதனை நீங்கள் உங்கள் காலை உணவிகள் அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் அதிகரிக்க காய்கறிகள் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை செய்து பன்னீர் அல்லது முட்டை புர்ஜி சாப்பிட்டு வரலாம் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
முளைகட்டிய பயறு வகைகள்:
முளைகட்டிய பயிரில் தினமும் சாலட் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவாக இருக்கும். மேலும் இது ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். மேலும் உங்கள் உடல் எடையை கச்சிதமாக அவைத்துக்கொள்ள வழிவகுக்கும்.
ஓட்ஸ் இட்லி/ ஊத்தாப்பம்:
பொதுவாக ஓட்ஸ் புரதம் நிறைந்த உணவு மட்டுமல்ல, சமைப்பதற்கும் மிகவும் எளிதாக இருக்கும். ஆக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை ஓட்ஸில் செய்த உணவுகளை சாப்பிடுவருவது சிறந்த பலனை அளிக்கும்.
கோதுமை ரவை:
உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் கோதுமை ரவையில் செய்த உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதம் இரண்டும் அதிகம் உள்ளது. உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுப்பதோடு, உடல் எடையை குறைக்க உதவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடல் எடை குறைய பீன்ஸ் சாப்பிடுங்க..!
உப்புமா:
மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு தான் உப்புமா. இது ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக நம்மை வைத்துக்கொள்ள உதவும். இதனுடன் ஒரு கப் கொண்டைக்கடலை அவித்து சாப்பிட்டு வரலாம். இதுவும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
குறுப்பு:
காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நிறை அருந்துங்கள், இதன் கூடவே 1 ஒரு மணி நேரம் நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள உணவுகளில் ஏதாவது ஒன்றை தினமும் காலை உணவாக செய்து சாப்பிடுங்கள்..
மேலும் காலை, மதியம், இரவு இந்த மூன்று வேளையும் கட்டாயம் உணவருந்த வேண்டும். ஆக அதனை அளவோடு சாப்பிடுங்கள். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |