உடல் எடை குறைய இனி எதுவும் செய்ய வேண்டாம்..! இதை மட்டும் குடித்தால் போதும்..!

Advertisement

உடல் எடை குறைக்க

இன்றைய காலத்தில் உள்ள ஆண், பெண் இருவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது உடல் எடை அதிகரிப்பு தான். சிலர் எப்படியாவது உடல் எடையை குறைத்து சிலிம்மாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் மருத்துவரிடம் ஆலோசித்து மாத்திரை, யோகா மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து வருவார்கள். ஆனால் அவை அனைத்தும் முழுமையான பலனை அளிக்கவில்லை என்று சிலர் அப்படியே விட்டு விடுவார்கள். உங்களுக்கு உதவியளிக்கும் வகையில் இன்று நமது ஆரோக்கியம் பதிவில் உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொண்டு நீங்களும் மற்றவர்களை போல சிலிம்மான தோற்றத்துடன் இருக்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ கல்லீரல் மற்றும் இரத்த நாளங்கள் சுத்தம் செய்ய இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்..!

Udal Edai Vegamaga Kuraiya:

உடல் எடை குறைய

நமது உடலில் உள்ள தேவையில்லாத சில கொழுப்பக்களின் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்க செய்கிறது. இத்தகைய உடல் எடையினால் சில உடல் உபாதைகளும் நமக்கு வருகிறது.

அதனால் உடல் எடையை மிக வேகமாக குறைப்பதற்கு முதலில் இயற்கையான முறையில் தண்ணீர் தயாரிக்க வேண்டும். அதனை தயாரிக்க தேவையான பொருள் மற்றும் செய்முறை பற்றி விரிவாக கீழே பார்த்து தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • சீரகம்- 1 தேக்கரண்டி 
  • ஓமம்- 1 தேக்கரண்டி 
  • சோம்பு- 1 தேக்கரண்டி
  • தேன்- 1 தேக்கரண்டி 

How to Lose Weight Naturally at Home Remedy:

 நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் கால்சியம், இரும்பு, வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதனால் எது செரிமானத்திற்கு மட்டும் இல்லாமல் உடல் எடை குறைவிற்கும் சிறந்த பலனை அளிக்கிறது.  

அதனால் ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி சோம்பு எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 1 தேக்கரண்டி ஓமமும் எடுத்துகொள்ளுங்கள்.

ஓமத்தில் இயற்கையாகவே கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் உடல் எடை குறைய வைப்பதற்கு பயன் அளிக்கிறது. 

இப்போது பவுலில் எடுத்துவைத்துள்ள பொருட்களில் சுடு தண்ணீர் ஊற்றி அப்படியே வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் எழுந்து பவுலில் பொருட்களுடன் ஊறி இருக்கும் தண்ணீரை வடிகட்டி வைத்து வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீருடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

அடுத்து கலந்து வைத்துள்ள அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் போதும் உடல் எடை விரைவில் குறைந்து விடும். 

நாம் சோம்பு, ஓமம் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் செரிமான தன்மையை அதிகரிக்கவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்க செய்கிறது. 

இதையும் படியுங்கள்⇒ 7 நாட்களில் கழுத்து மற்றும் முதுகு வலி பிரச்சனைக்கு தீர்வு..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement