வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்:-
Ulcer treatment in tamil:- தற்போது உள்ள அவசர உலகில் நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். நாகரிகம் என்று உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களையும் உருவாக்கிக்கொண்டோம். இதன் காரணமாக பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கின்றோம்.
அந்த வகையில் நாம் அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனை தான் அல்சர் என்று சொல்ல கூடிய வயிற்றுப்புண், இந்த பிரச்சனையால் இப்போது பலரும் அவதிப்படுகின்றன.
வயிற்றுப்புண் ஏற்பட்டால் மிகவும் கடுமையான வயிற்று வலியை ஏற்படும். அதுமட்டுமல்லாமல் உணவின் மீது வெறுப்பு தன்மையை ஏற்படும். ஏதாவது உணவை சாப்பிட்ட பின் உடனே அதிகப்படியான வயிற்று வலி ஏற்படும்.
இந்த வயிற்று வலியினால் சிலருக்கு தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதையும் படியுங்கள்👉அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் |
வயிற்றுப்புண் என்பது ஒரு சாதாரணமான பிரச்சனை தான், இதனை நாம் தினமும் சாப்பிடும் உணவின் மூலமாகவே சரி செய்துவிட முடியும்.
அதாவது இந்தப் பிரச்சனையிலிருந்து தீர்வு பெறுவதற்கு சில உணவுப் பொருட்கள் நமக்கு (ulcer treatment food to eat in tamil) உதவிபுரிகின்றன. அவைகளைப் பற்றி இங்கு அறிவோம்.
வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் / Ulcer treatment food in tamil..!
வயிற்று புண் குணமடைய உணவு – இளநீர்:
தென்னையில் உள்ள அனைத்து பாகங்களும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது.
எனவே அல்சர் என்று சொல்ல கூடிய வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர், செவ்விளநீர் போன்றவற்றை தினமும் பருகி வரலாம்.
இளநீரை வெறும் வயிற்றில் பருகுவதை விட உணவு அருந்திய 1 மணி நேரம் கழித்து அருந்திவர வயிற்றுப்புண் (ulcer treatment in tamil) குணமாகும்.
இளநீரை தினமும் பருகுவதினால் இழந்த தாதுச்சத்துக்கள் திரும்ப பெறலாம். ஆனால் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் இளநீரை அளவுடன் பருகுவது மிகவும் நல்லது.
இதையும் படியுங்கள்👉 அல்சர் குணமாக சித்த வைத்தியம் |
அல்சர் முற்றிலும் குணமாக – தேங்காய் பால்:
அல்சர் என்று சொல்ல கூடிய வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாப்பிடும் உணவில் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளலாம்.
அதாவது தேங்காயை துருவி அதில் இருந்து பாலினை பிழிந்து அதனுடன் சிறிதளவு சக்கரை மற்றும் ஏலக்காய் பவுடர் கலந்து அந்த பாலினை அருந்தலாம் அல்லது சாதம், இட்லி, தோசை போன்ற உணவில் ஊற்றி ஊறவைத்து சாப்பிடலாம்.
இவ்வாறு தொடர்ந்து சாப்பிடுவதினால் அல்சர் (ulcer treatment in tamil) என்று சொல்ல கூடிய வயிற்றுப்புண் குணமாகும்.
வயிற்று புண் குணமடைய உணவு – தயிர்:-
அல்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தயிரில் செய்த உணவுகளை சாப்பிடலாம். அதாவது தயிர் சாதம், நீர் மோர் அருந்தலாம், லெஸியாக செய்து சாப்பிடலாம்.
தயிர் ஒரு குளிர்ச்சி நிறைந்த உணவு என்பதால் வயிற்றுப்புண் குணமடைய (ulcer treatment in tamil) ஒரு சிறந்த உணவாக விளங்குகிறது.
இதையும் படியுங்கள்👉 வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் |
அல்சரை குணப்படுத்தும் அற்புத மருந்து:-
Ulcer home remedies – தேங்காய் பால் – 20 மில்லி, நெய் – 10 மில்லி, தேன் – 1 தேக்கரண்டி இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த பானத்தை தினமும் சாப்பிடுவதற்கு முன் அதாவது 1/2 நேரத்திற்கு முன் 30 மில்லி அருந்த வேண்டும். இவ்வாறு காலை, மாலை என்று இரண்டு வேளை அருந்திவர அல்சர் குணமாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |