இந்த 7 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..!|Unhealthy foods in tamil

unhealthy foods

சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றிய தகவல்கள்..! 

வணக்கம் அன்பான நேயர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் நாம் சாப்பிடவே கூடாத 7 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் பல நவீன முறைகளில் உருவாக்கக்கூடிய பல உணவுகளை உண்ணுகின்றோம். அவற்றில் சிலவற்றை உண்ணுவதால் நமக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதிலும் இந்தப் பதிவில் கூறியுள்ள 7 வகையான உணவுகள் நமது உடலுக்கு மிகுந்த தீமைகளை விளைவிக்கும் என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றது.

சாப்பிடக்கூடாத 7 உணவுகள் பற்றிய தகவல்கள்:

1. சிப்ஸ் வகைகள்: 

Snacks and Fried itemsமுதலாவதாக சிப்ஸ் வகைகளை ஏன் சாப்பிடக்கூடாது என்றால் இவைகளில் அதிகமான கலோரி நிறைந்துள்ளன. அதனால் நமது உடல் எடை அதிகரிக்கும்.

மேலும் இவைகளை சாப்பிடுவதால் நமது ஜீரண மண்டலத்தில் சிறிய சிறிய கீறல்களை ஏற்படுத்தும். இவைகள் வருங்காலத்தில் அஜீரண  மற்றும் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.

இவைகளின் சுவைகளை அதிகரிப்பதற்காக இவைகளில் அதிக சுவையூட்டும் திறன்கொண்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதால் இவை நமது உடலுக்கு மிகுந்த தீமைகளை விளைவிக்கின்றன. அதனால் கடைகளில் பாக்கெட்டில்  அடித்து விற்கப்படும் சிப்ஸ் வகைகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

2. சோடா வகைகள் : 

Soda Thimaikal in Tamil

அடுத்து நமது உடலுக்கு தீமை விளைவிக்கும் உணவு வகைகளில் முக்கியமான ஒன்று இந்த சோடா வகைகள். முக்கியமாக கடைகளில் விற்கப்படும் கார்பனேற்றிய சோடா  வகைகள் குடிப்பது நமது உடலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக்கூடும்.

இந்த சோடா வகைகளால் என்ன தீமைகள் விளையக்கூடும் என்றால் நமது சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கக்கூடிய அளவிற்கு தீமைகளை விளைவிக்கும். மேலும் இவைகளை குடிப்பதால் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

3. பழச்சாறுகள் வகைகள் :

unhealthy foods in tamil

மூன்றாவதாக உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய உணவு வகை எதுவென்றால் கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் தான். இவைகளை பருகுவதால் பல நோய்களுக்கு  வழிவகுக்கின்றன.

இவைகளில் கலக்கப்படும் பல அமிலங்களால் நமது உடலுக்கு பல தீமைகளை விளைவிக்கக்கூடும். மேலும் இதில்  கலக்கப்படும் அதிகப்படியான ரசாயன பொருட்களால் பல நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

4. Noodles வகைகள் :

junk food list in tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த Noodles வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். ஆனால் இவைகளை சாப்பிடுவதாலும் நமது உடலுக்கு மிகுந்த தீமைகள் விளையக்கூடும்.

இதில் உள்ள அதிகப்படியான வேதிப்பொருட்கள் மற்றும் மைதா போன்றவை நமது உடலுக்கு மிகுந்த தீமைகளை விளைவிக்கிறது. மேலும் இவைகளை சாப்பிடுவதால் அதிகப்படியான கலோரி நமது உடலுக்கு வந்து சேருகின்றன.

இந்த வகையான உணவினை சாப்பிடுவதால் நமது சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

5. Pre-Cooked Soup வகைகள்:

 Pre-Coocked Soup in tamil

இந்த Pre-Cooked Soup வகைகளும் நமது உடலுக்கு மிகவும் தீமைகளை விளைவிக்கின்றன. இவைகளில் கலக்கப்படும்  அஜினோமோட்டோ மேலும் பல வேதிப்பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களால் நமது உடலில் அதிகப்படியான இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

6. Pre-Cooked Foods வகைகள் :

Pre-Coocked Foods in tamil இன்றைய காலகட்டத்தில் முன்னரே சமைத்து பாக்கெட்டுகளில்  அடிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் Pre-Cooked Foods வகைகளை வாங்கி சாப்பிடுவதால் நமது உடலுக்கு மிகுந்த தீமைகள் மற்றும் பலவகையான நோய்களுக்கு  வழிவகுக்கின்றன.

மேலும் இவைகளில் பலவகையான ரசாயன மற்றும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் நமது உடலுக்கு பல தீமைகளை  விளைவிக்கின்றன. அதனால் இந்த உணவுகளை  சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

7. Snacks and Fried items :

not healthy foods in tamilஇறுதியாக நாம் தவிர்க்கவேண்டிய உணவுகளில் ஒன்று இந்த Snacks மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் தான். இவைகளிலும்  கலோரி அதிகம்  நிறைந்துள்ளன.

அதனால் இவைகளை சாப்பிடுவதால் நமக்கு இதயம்  சம்மந்தப்பட்ட பிரச்சனை மேலும்  இரத்த அழுத்தம் அதிகரிப்பது மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்ற பலவிதமான நோய்களுக்கு இந்த வகையான உணவு பொருட்கள் வழிவகுக்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்த 7 வகையான உணவுகளை சாப்பிடுவதால் வயிறு மற்றும் இரைப்பை சம்மந்தமான நோய்கள், மலக்குடலில் அலர்ஜி, மூலம், இருதய அடைப்பு போன்ற இன்னும் பல நோய்கள் ஏற்படுகின்றன.

தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்