சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம்

Advertisement

சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம் | Urine Infection Treatment in Tamil

ஒருவருக்கு சிறுநீர் தொற்று வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.. அதாவது சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பது, காரம் அதிகமாக சாப்பிடுவது, தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பது இது போன்று பல காரணங்களை சொல்லலாம். ஒருவருக்கு சிறுநீர் தொற்று இருக்கிறது என்றால் அவர்கள் சிறுநீர் கழிக்கும்போது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும்.

அதாவது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம், அல்லது சிறுநீர் வந்தாலும் மிகவும் மெதுவாக சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அல்லது பாத்ரூமிற்கு போவதற்கு முன்பே அதனை அடக்க முடியாமல் சிறிதளவு சிறுநீரை கழித்துவிடுவது. இரத்தம் கலந்த சிறுநீர் வருவது. அல்லது மங்கலாக சிறுநீர் கழிப்பது இவையெல்லாம் சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள் ஆகும்.

சரி இப்பொழுது இந்த சிறுநீர் தொற்றுக்கு வீட்டு வைத்தியம் சிலவற்றை பார்க்கலாம். இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் ஆரம்ப நிலையில் இருக்கும் சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு மட்டுமே. உங்களுக்கு பிரச்சனையானது மிகவும் தீவிரமாக இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை தான் அணுக வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ சிறுநீர் தொற்று நீங்க இயற்கை மருத்துவம்

சிறுநீர் தொற்று குணமாக:

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பின் அதனை குடிக்கலாம். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால் சிறுநீர் தொற்று பிரச்சனை குணமாகும்.

சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம்:

அடுத்த குறிப்பு என்னெவென்றால் இரவு உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பிறகு அதனை அருந்தலாம். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் இரவு அருந்திவந்தால் சிறுநீர் தொற்று பிரச்சனை குணமாகும்.

சிறுநீர் தொற்று நாட்டு வைத்தியம்:

இந்த டிப்ஸைகூட பின்பற்றலாம் அதாவது ஒரு கிளாஸ் சூடான நீரில் அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவரலாம். இவ்வாறு செய்து வந்தால் சிறுநீர் தொற்று நீங்க ஆரம்பிக்கும்.

சிறுநீர் தொற்று குணமாக:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு அதனை வடிகட்டி மிதமான சூட்டில் காலை வெறும் வயிற்றில் அருந்தலாம். இதனை தொடர்ந்து 40 நாட்கள் பருகிவந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள 4 வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வந்தாலே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் ட்ரை செய்து பாருங்கள்.

பொறுப்பு துறப்பு:

சிறுநீர் தொற்று பிரச்சனை குணமாக மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வைத்திய குறிப்புகளையும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement