கருப்பையை சுத்தப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

Uterus Cleaning Food in Tamil

Uterus Cleaning Food in Tamil..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் கருப்பையை சுத்தப்படுத்த கூடிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். கருப்பை தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பை உருவாக்குகிறது.

பெண்கள் தங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஓன்று. கருப்பை சுத்தமாக இருந்தால் பெண்களுடைய உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அதுபோல கருப்பையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அவை என்ன உணவுகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

கருப்பையை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கருப்பை ஆரோக்கியமாக இருந்தால் பெண்களுடைய மொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பப்பை ஆரோக்கியமாக இல்லை என்பதை பெண்களின் முகத்தை வைத்தே கண்டறியலாம்.

பெண்களுக்கு முடி கொட்டுவது, முகத்தில் பருக்கள் வருவது, சீரற்ற மாதவிடாய், மாதவிடாய் காலங்களில் கடுமையான வலி போன்றவை கருப்பையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தான் இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கற்றாழை:

கற்றாழை

இந்த சோற்று கற்றாழையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இந்த கற்றாழை பெண்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. இதில் கருப்பையை சுத்தப்படுத்த கூடிய ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.

காலையில் தினமும் கற்றாழையை வெறும் வயிற்றில் மோரில் கலந்து குடித்து வருவதால் கருப்பை கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

சோம்பு நீர் பயன்கள்:

சோம்பு நீர்

பெண்கள் மாதவிடாய் காலங்களில் இந்த சோம்பு நீரை குடிப்பதால் வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்கிறது. இந்த சோம்பு நீர் கருப்பையை சுத்தப்படுத்த உதவுகிறது. இதை மாதவிடாய் காலங்களில் குடித்து வருவதால் சீரான மாதவிடாய் நடைபெற உதவுகிறது.

வல்லாரை கீரை: 

வல்லாரை கீரை

இந்த வல்லாரை கீரையை பெண்கள் சாப்பிட்டு வருவதால் பல நன்மைகளை தருகிறது. இது பெண்களின் கருப்பையை காக்க கூடிய ஒரு மூலிகை என்றே கூறலாம். இந்த கீரை கர்ப்பப்பையை வலிமையாக வைக்க உதவுகிறது. இந்த வல்லாரை கீரை கருப்பையை சுத்தப்படுத்த உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil