வாயில் துர்நாற்றம் போக என்ன செய்வது
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் பல்லை நன்றாக துலக்க வேண்டும் என்று சொல்வார்கள். பல்லை நன்றாக துலக்கினாலும் நாற்றம் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா.! வாங்க வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம். அது என்னென்ன பொருட்கள் எப்படி சரி பயன்படுத்துவது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்:
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு வயிற்றில் புண் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். வயிற்றிலுள்ள அமிலம் உணவு குழாய்க்கு சென்றடைவதால் நெஞ்சு மற்றும் எரிச்சல் உண்டாகிறது. இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்சனைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது.இதையும் படியுங்கள் ⇒ அக்குள் பகுதி துர்நாற்றம் வராமல் இருக்க இதை பண்ணுங்க
வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள்:
பல் துலக்குதல்:
பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். நீங்கள் காலையிலுருந்து சாப்பிட்ட உணவுகளை அப்படியே வைத்து தூங்கினால் குப்பை தொட்டி எப்படி இருக்குமோ அது போல் தான் உங்களின் வாய் இருக்கும். அதனால் தான் இரவு தூங்குவதற்கு முன் பல் துலக்க வேண்டும்.
எண்ணெய் வாய் கொப்பளித்தல்:
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லண்ணெய் ஏதாவது ஒரு எண்ணெயை 2 தேக்கரண்டி எடுத்து வாயில் 5 நிமிடம் வைத்து கொப்பளியுங்கள். இது போல் செய்து வந்தால் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.
பல் துலக்கும் பிரஷ்:
பல் துலக்கும் பிரஷை வருட கணக்காக பயன்படுத்த கூடாது.நீண்ட நாட்களாக ஒரே பிரஷை பயன்படுத்தினால் அந்த பிரஸில் இருக்கும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் பல் துலக்கும் பிரஷை 3 மாதத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.Tongue cleaner:
பல்லை மட்டும் சுத்தம் செய்தால் போதாது. நாக்கில் தேங்கியிருக்கும் கிருமிகளாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். அதனால் நாக்கை சுத்தப்படுத்துவதற்கு Tongue cleaner என்று கடையில் கேட்டு வாங்கி கொள்ளுங்கள். இதை பயன்படுத்தி நாக்கை சுத்தப்படுத்துங்கள்.
உப்பு தண்ணீர்:
ஒரு 1/2 டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளியுங்கள். தொண்டை பகுதிக்கு வரைக்கும் உப்பு தண்ணீரை வைத்து வாய் கொப்பளியுங்கள்.
துளசி இலை:
தினமும் 2 அல்லது 3 துளசி இலைகளை வாயில் வைத்து மென்றால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
தண்ணீர் குடிக்கும் முறை:
உடலிற்கு தண்ணீர் சத்து குறைபாட்டாலும் வாய் மற்றும் வயிறு காய்ந்து விடும். இதனால் தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதனால் தினமும் தண்ணீர் அதிகமாக குடியுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |