வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள் | Vallarai Keerai Health Benefits in Tamil
Vallarai Keerai Benefits in Tamil/ வல்லாரை கீரை நன்மைகள்: வணக்கம் நண்பர்களே இதற்கு முன் உள்ள பதிவில் வல்லாரை கீரை ரெசிப்பீஸ் பார்த்தோம். இன்று வல்லாரை கீரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று தெரிந்துகொள்ளலாம். மருத்துவ குணம் அதிகமாக நிறைந்துள்ளது இந்த வல்லாரை. உடல் ஆரோக்கியம் முதல் சரும அழகு வரையிலும் இந்த வல்லாரையானது மகிமை பெற்ற ஒன்று. இந்த வல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. வல்லாரை கீரை முடி வளர்ச்சிக்கு, ஞாபக திறன் அதிகரிக்க, மன அழுத்தம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கக்கூடிய மூலிகை கீரையாகும். இந்த கீரையால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி ஒவ்வொன்றாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
40 கீரை வகைகள் அதன் பயன்களும்..! |
Vallarai Keerai Benefits in Tamil:
மூளை திறனை அதிகரிக்கும் வல்லாரை:
நமது மூளையானது எப்போதும் சீராக இருந்தால் புத்துணர்ச்சியோடும், நல்ல ஆற்றலாகவும் இருக்கும். மூளை பகுதிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தும் இந்த வல்லாரை கீரையில் உள்ளது. வல்லாரையில் செரடோனின் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக இருப்பதனால் மூளையின் நரம்புகளை தூண்டி நினைவு திறனை அதிகரிக்க செய்யும். வளரும் குழந்தைக்கு வாரத்தில் இருமுறையாவது உணவில் வல்லாரை கீரை கொடுத்து வர ஞாபக திறன் அதிகரிக்கும்.
பற்களில் உள்ள கறை நீங்க:
சிலர் புகை பிடிப்பதால், வெற்றிலை பாக்கு போடுவதால், சிறிய குழந்தைகள் சரியாக பல் துலக்காததால் பற்களில் கறை படிந்து இருக்கும். பற்களில் உள்ள கறையை அகற்றுவதற்கு வல்லாரை கீரையை நிழலில் நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கறைகள் உள்ள பற்களில் தேய்த்து வந்தால் கறைகள் அனைத்தும் மாறிவிடும். பற்களில் உள்ள ஈறுகளும் நன்றாக வலுவுடன் இருக்கும்.
பசலைக்கீரை பயன்கள் |
புண்கள் / யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை:
சிலர் யானைக்கால் நோயால் நடக்க முடியாமல் மிகவும் அவதிப்படுவார்கள். வல்லாரை கீரையை அரைத்து நோய் தாக்கிய இடத்தில் பற்று போட்டு இறுக்கமாக கட்டி வந்தால் யானைக்கால் தாக்கமானது குறையும். மேலும் புண், கட்டிகளினால் அவதிப்படுவோர் இந்த வல்லாரையை நன்றாக அரைத்து அதன் சாற்றினை புண்கள் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
வயிற்று சம்பந்த பிரச்சனைக்கு தீர்வு:
வல்லாரையை அரைத்து அதன் சாறினை தினமும் குடித்து வந்தால் வயிற்றிலுள்ள புண்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துவிடும். மேலும் வல்லாரை பொடியுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதக்கழிச்சல், வயிறு வலி, வயிற்று கடுப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.
கண் சம்பந்த நோய் குணமாகும்:
கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், வெயில் சூட்டினால் கண்கள் சிவப்படைதல் இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலே கண்டறிந்தால் வல்லாரை கீரையை வைத்து சரி செய்யலாம். குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது வல்லாரை கீரையை உணவில் சேர்த்து கொடுத்து வந்தால் கண் பார்வைத்திறன் அதிகரிக்கும். முக்கியமாக மாலைக்கண் நோய் உள்ளவர்கள் வல்லாரை கீரையினை அரைத்து அதன் சாறினை பசும்பாலில் கலந்து குடித்துவந்தால் மாலைக்கண் நோய் முற்றிலும் குணமாகும்.
மாடித்தோட்டத்தில் வல்லாரை கீரை வளர்ப்பது எப்படி.?
இரத்த சோகை குணமாகும்:
இன்று அதிகளவில் இளம் வயதினர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று இரத்த சோகை. இளம் வயதினர் அனைவருக்கும் இப்போது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த அளவில் காணப்படுகிறது. வல்லாரை சாப்பிடுவதால் இரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வலியை குறைக்கும்:
vallarai keerai health benefits: பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்றவைகளை சந்தித்து வருகிறார்கள். இது போன்ற வலிகளிலிருந்து தப்பிக்க வல்லாரை கீரை சாறுடன் வெந்தயத்தை குழைத்து மாதவிடாய் நேரங்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் அனைத்து வலிகளும் குறையும். இந்த நேரத்தில் மாத்திரை உட்கொள்வதை தவிர்த்து வல்லாரை வைத்தே வலியினை சுலபமாக குறைத்துவிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips In Tamil |