வெந்தய கீரை பயன்கள் | Vendhaya Keerai Uses in Tamil
வணக்கம் நண்பர்களே வெந்தய கீரை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உள்ளது என்று தெரிந்துக்கொள்ளலாம். கீரை என்று எடுத்துக்கொண்டாலே அதில் ஏராளமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. சிலருக்கு கீரை என்றாலே பிடிக்காத விஷயமாக இருக்கும். அதில் இருக்கின்ற நன்மைகளை பற்றி அவர்களுக்கு தெரிவதே இல்லை. வெந்தய கீரையை இந்தி மொழியில் மேத்தி கீரை என்று சொல்வதுண்டு. இந்த கீரையை பெரும்பாலும் சமையலில் அனைவரும் பயன்படுத்துவதுண்டு. வெந்தய கீரையில் அதிக அளவிலான நார்ச்சத்து, இரும்புசத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இத்தகைய நன்மைகள் அடங்கியுள்ள வெந்தய கீரையை தவறாமல் சாப்பிட்டால் உடலில் என்னென்ன நோய்கள் காணாமல் போகிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
பசலைக்கீரை நன்மைகள் |
நீரிழிவு நோய் குணமாக:
நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வெந்தய கீரை நல்ல பலனை அளிக்கிறது. வெந்தய கீரை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மேம்படுத்தி குளுக்கோஸ் அளவினை குறைத்து விடுகிறது. வெந்தய கீரையில் உள்ள நார்ச்சத்துக்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுகின்றன. இதனால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு நாள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும்.
மாதவிடாய் கோளாறு நீங்க:
பெண்கள் அனைவரும் மாதவிடாய் நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். மாதவிடாய் நேரத்தில் நாள் முழுவதும் உடல் சோர்வு, அடி வயிற்று வலி போன்ற பிரச்சனையினால் அவதிப்படுவார்கள். சிலருக்கு மாதவிடாயானது சீரான முறையில் வராது. இதற்கு வெந்தய கீரையை தொடர்ந்து உணவில் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க:
சிலர் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி உடல் எடை அதிகரித்து காணப்படுவார்கள். உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்களால் நீண்ட நேரம் எந்த ஒரு வேலையையும் முழுமையாக செய்ய முடியாது, நடப்பதற்கு சிரமம் ஏற்படும் இது மாதிரியான பல இன்னல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. வெந்தய கீரையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. இந்த கீரை உடல் செரிமானத்தை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவினை முற்றிலும் குறைத்து விடுகிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்துவிடும். வெந்தய கீரை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அகத்திக்கீரை நன்மைகள் |
இடுப்பு வலி நீங்க:
இடுப்பு வலி என்பது இன்றைய காலத்தில் ஆண், பெண் இருவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்றாக மாறிவிட்டது. பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியை பார்த்தபடி வேலை செய்வது, கனமான பொருளை தூக்குதல் போன்ற வேலைகளை செய்வதால் இடுப்பு வலி வருவதற்கு வாய்ப்புள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு இடுப்பு வலியால் அவதிப்படுகிறார்கள். இடுப்பு வலி சரியாக வெந்தய கீரையோடு நாட்டு கோழி முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர இடுப்பு வலி காணாமல் போகும்.
இதயம் ஆரோக்கியமாக இருக்க:
வெந்தய கீரையில் அதிகமாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. வெந்தய கீரை இதயம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது. வெந்தய கீரை இரத்த அழுத்தத்தினை முற்றிலும் குறைத்துவிடும் ஆற்றல் உடையது. வெந்தய கீரையானது இதயத்தில் இரத்தம் உறையாமல் பாதுகாக்கவும், கொழுப்பு தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுதல், ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகிய அனைத்தும் செய்யும் ஒரே கீரை வெந்தய கீரை.
40 கீரை வகைகள் அதன் பயன்களும்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |