வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள் |Vitamin B12 Foods Benefits|
Vitamin B12 Foods In Tamil / vitamin b12 உணவுகள் : நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வைட்டமின் பி12 உள்ள உணவுகள் மற்றும் அதன் பயன்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். சிலர் எப்போதும் உடல் சோர்வாக காணப்படுவார்கள். அதன் காரணம் என்னவென்றால் வைட்டமின் பி 12 குறைபாட்டுடன் இருப்பதாக கூட இருக்கலாம். நம் உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு மிகவும் தேவைப்படுவது வைட்டமின் பி 12. உடலில் தேவையான அளவிற்கு வைட்டமின் சத்துக்கள் இல்லையென்றால் உடலானது எப்போதும் சோர்வுடன் மற்றும் இரத்த சோகை உள்ளவர்கள் போல் தென்படுவார்கள்.
வைட்டமின் பி 12 உணவுகள் (vitamin B12 foods in tamil) அதிகமான அளவு இல்லாவிட்டாலும் நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் வைட்டமின் பி 12 கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் பி12-ல் சிவப்பு இரத்த செல்கள் உருவாகுதல், நரம்பு மண்டலம் பாதுகாப்படைய செய்யும், டிஎன்ஏ உருவாக்கம், உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் போன்ற பல செயல்பாடுகள் இந்த வைட்டமின் பி 12-ல் அடங்கியுள்ளது. சரி வாங்க நண்பர்களே இப்போது வைட்டமின் பி 12 நிறைந்துள்ள உணவுகளை படித்தறிவோம்..!
வைட்டமின் குறைபாடு அறிகுறிகள் & அதற்கான உணவு முறை |
B12 Rich Foods in Tamil:
வைட்டமின் பி 12 நிறைந்த பால்:
பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட அனைத்து பொருள்களிலும் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பால் வைட்டமின் பி 12 நிறைந்த மூலப்பொருளாக இருக்கிறது. சைவ பிரியர்களுக்கு முக்கியமான உணவாக இருக்கும்.
வைட்டமின் பி 12 சத்து பெரும்பாலும் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளில் இருக்கிறது. பால், தயிர் மற்றும் சீஸ் போன்றவை எந்த நேரங்களிலும் கிடைக்க கூடியதாக உள்ளது. மனித உடலானது பால் மற்றும் பால் சம்மந்த பொருள்களில் இருந்து பி12 ஐ அதிகரிக்க செய்யும் திறனானது.
குறிப்பு: பால் சிலருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மோர் எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் பி12 நிறைந்த முட்டை:
முட்டையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக வைட்டமின் பி 12 நிறைந்து இருக்கும் உணவு இந்த முட்டை. முட்டையின் மஞ்சள் கருவில் வெள்ளை பகுதியை விடவும் அதிக வைட்டமின் பி 12 உள்ளது. இதனால் தான் முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சாப்பிடாமல் முழு முட்டையினை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தினமும் ஒரு முட்டையினை சாப்பிடுவதினால் நம் உடலுக்கு தேவையான பி 12 கிடைக்காமல் இருக்கலாம். இதனை ஈடுபடுத்துவதற்காக உணவில் போதுமான வைட்டமின் பி 12 உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் வைட்டமின் பி 12 சத்துக்கள் அதிகரிக்கும்.
குறிப்பு: தினமும் 1 முட்டையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை உள்ளதா..! |
அதிக வைட்டமின் பி 12 நிறைந்துள்ள மீன்:
மீன்களில் ஹெர்ரிங், சால்மன், சார்டைன்கல், டூனா மற்றும் டிரவுட் போன்ற மீன் வகைகளில் அதிகளவு வைட்டமின் பி 12 நிறைந்து இருக்கிறது. இந்த மீன்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. அடுத்து நன்னீர் சேர்ந்த மீன் வகைகளும் புரத சத்துக்கள், கொழுப்பு, பி வைட்டமின்கள், ஒமெகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் செலீனியம் போன்ற தனிம வகைகள் நிறைந்த உணவுகளாகும்.
குறிப்பு: உடலின் உணவூட்ட மதிப்பினை பெற மீனை குறைந்த நேரம் மட்டுமே சமைக்க வேண்டும்.
வைட்டமின் பி 12 அதிகம் பெற்ற நண்டு:
வைட்டமின் பி 12 அதிகம் உள்ள மற்றொரு உணவு நண்டாகும். நண்டில் குறைந்த கொழுப்பு சத்துக்கள், புரதம், நியாசின் மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது. அதோடு அசைவ உணவான நண்டில் ஃபோலேட்கள், இரும்புச்சத்து மற்றும் செலீனியம் என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது.
நண்டில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதனால் உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். நண்டில் கொழுப்புகள் குறைவாக உள்ளதால் இதய சம்மந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும். வைட்டமின் பி 12 குறைவாக இருந்தால் நரம்பு மண்டலம் மற்றும் மூளைக்கு பல பாதிப்பினை உண்டாக்க கூடும்.
இதனால் கண் பார்வை கோளாறுகள், செயல் நினைவாற்றல் இழப்பு, கை, கால் பாதங்களில் குத்துதல், தசையிணக்கமின்மை போன்ற நோய்கள் நம் உடல் முழுவதினையும் பாதிப்படைய செய்யும். இதனை மட்டும் வைத்து உடலில் வைட்டமின் பி 12 குறைப்பாடு இருக்கிறது என்று கூற முடியாது. கருவுறுதலில் சிக்கல், மலட்டுத்தன்மை போன்றவை வைட்டமின் பி 12 உடலில் குறைவாக காணப்பட்டால் இருக்கலாம்.
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் |
குறிப்பு: நண்டுகளை பேக்கிங் செய்து, ஆவியில் வேக வைத்தோ அல்லது சமைத்தும் சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நலவாழ்வும் |