வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் | Vitamin E Foods in Tamil

Vitamin E Foods in Tamil

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் | Vitamin E Foods List in Tamil

Vitamin E Foods in Tamil: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் வைட்டமின் ஈ. சிலருக்கு வைட்டமின் குறைபாட்டினால் உடலில் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகமாக இருந்தால் உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களையும் குணப்படுத்திவிடலாம். வைட்டமின் ஈ சத்தானது உடலில் செல்களின் வளர்ச்சிக்கும், புற்றுநோயை வளரவிடாமல் தடுப்பதற்கும் பெரும் உதவியாக இருக்கிறது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க எங்கள் பொதுநலம் பதிவில் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை லிஸ்ட் அவுட் செய்துள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

வைட்டமின் ஈ நிறைந்த பசலை கீரை:

 vitamin e foods list in tamil

உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்கள் பசலை கீரையிலிருந்து நமக்கு கிடைக்கிறது. பசலை கீரையில் வைட்டமின் ஈ சத்துக்களும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. உடலில் வைட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்கள் உணவில் தினமும் பசலை கீரையை சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஈ அதிகமுள்ள வேர்க்கடலை:

வேர்க்கடலை

ஒரு தேக்கரண்டி வேர்க்கடலையில் 20% வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் அகன்று உடல் எடையை குறைக்க செய்யும். முக்கியமாக பெருங்குடல் புற்றுநோய் வராமல் வேர்க்கடலை தடுத்து நிறுத்துகிறது. மேலும் வேர்கடலையால் ஆன எண்ணெயினை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகளவு கிடைக்கிறது. 

வைட்டமின் ஈ உள்ள ஆலிவ் ஊறுகாய்: 

ஆலிவ் ஊறுகாய்

நம்முடைய உடலுக்கு வைட்டமின் சத்தானது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் வைட்டமின் ஈ சத்தானது மிகவும் முக்கியமானது. ஊறுகாய் என்றாலே அனைவரும் பிரியப்பட்டு சாப்பிடக்கூடிய சைடிஷ். ஆலிவ் ஊறுகாயில் வைட்டமின் ஈ சத்தானது 100 கிராம் அளவிற்கு நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ சத்தை அதிகரிக்க நினைப்பவர்கள் ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம்.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்

வைட்டமின் ஈ சத்து உள்ள சூரியகாந்தி பூ விதை:

 வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்தாவர வகைகளில் இருந்து பெறப்படும் அனைத்து சத்துக்களும் நமது உடலுக்கு நன்மை பயப்பவையே. சூரியகாந்தி பூ விதையில் அதிகமாக வைட்டமின் இ, மெக்னீஷியம், தாமிரம், வைட்டமின் பி1, செலினியம் முழு நார்ச்சத்து போன்றவை இடம்பெற்றுள்ளது. 100 கிராம் சூரியகாந்தி பூ விதையில் வைட்டமின் ஈ அளவானது 35 கிராம் ஆகும். கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் சூரியகாந்தி பூ விதையை சாப்பிட்டு வர கல்லீரல் சீராக செயல்படும். வைட்டமின் ஈ சத்து அதிகரிக்க இந்த விதையினை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் ஈ சத்தான உலர் மூலிகைகள்:

 வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்மூலிகைகள் என்றாலே நம் நினைவிற்கு வருவது வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது தான். உலர் மூலிகைகளில் அதிகமாக வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலில் வைட்டமின் ஈ சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியத்துடன் பல நாள் வாழ உணவோடு உலர் மூலிகைகளை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்