வைட்டமின் கே உணவு வகைகள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்

vitamin k foods in tamil

வைட்டமின் கே பயன்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய  பதிவில் வைட்டமின் கே உணவு வகைகளை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களில் ஒன்று குறைந்தாலும் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இன்று வைட்டமின் கே நிறைந்த உணவுகளை பற்றி தெளிவாக படித்தறிந்து தெரிந்துகொள்வோம்.

வைட்டமின் கே உள்ள உணவுகள்:

கீரை:

வைட்டமின் கே உள்ள உணவுகள்

கீரை என்றால்  அதிகளவு சத்துக்கள் காணப்படுவது இரும்பு சத்து தான். அதனால் தான் அதனை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். வைட்டமின் கே நிறைந்த பொருளில் மிகவும் முக்கியமான ஒன்று கீரை அதிலும் செங்கீரையில் தான் வைட்டமின் கே அதிகம் காணப்படுகிறது. இதனை சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள எலும்பு மற்றும் தசைக்கும் அதிகம் பலம் நிறைந்து இருக்கும். அரை கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் கே காணப்படுகிறது இது ஒரு நாளுக்கு தேவைப்படும் சத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துக்களை பற்றியும் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவைட்டமின் சத்துக்கள் 

கருப்பு திராட்சை நன்மைகள்:

கருப்பு திராட்சை நன்மைகள்

கருப்பு திராட்சைக்கு பெயர் கொடி முந்திரி என்று தமிழ் நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் அழைக்கப்படுகிறது. இந்த திராட்சையை தினமும் சேர்த்துக்கொள்வதால் இதில் உள்ள சத்துக்கள் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை உடலுக்கு தருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை மொத்தமாவும் தருகிறது.

துளசி நீர் பயன்கள்:

துளசி நீர் பயன்கள்

துளசி நீரில் அதிகளவு நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதில் அதிகம் தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனை தினசரி 1 டீஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் கே சத்துக்களை தரும்.

வெள்ளரிக்காய் பயன்கள்:

வெள்ளரிக்காய் பயன்கள்

ஒரு வெள்ளரிக்காயில் 60% அளவுக்கு சத்துக்களை அளிக்கிறது.  அதுமட்டுமில்லாமல் பச்சை முட்டை கோஸ், முட்டை, ப்ரோக்கோலி, தாவர எண்ணெய், நட்ஸ் வகைகள் போன்ற அனைத்திலும் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள்:

வைட்டமின் கே குறைபாடு அறிகுறிகள்

உடலில் வைட்டமின்  கே சத்துக்கள் குறைந்தால் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகள் தான், அதுமட்டுமில்லாமல் தொடர் வயிற்றுவலி, இரத்த போக்கு ஏற்படும். அதிகம் குறைவு ஏற்பட்டால் திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்