உடல் இளைக்க இதை மட்டும் தினமும் காலை செய்து சாப்பிடுங்கள் போதும்..

Weight Loss Food Recipes in Tamil

உடல் எடை குறைய பொன்னாங்கண்ணி கீரை | Weight Loss Food Recipes in Tamil

Weight Loss Food Recipes in Tamil – இன்றைய லைப் ஸ்டைலில் பலர் உடல் எடையை குறைக்க பலவகையான விஷயங்களை பின்பற்றுகின்றன. அவர்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவிலும் உடல் எடை குறை பல வகையான டிப்ஸை பதிவு செய்துள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உடல் எடை குறைப்பதற்கான ஒரு பதிவு தான். அதாவது பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தி அடை செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை மிக எளிதாக குறைக்க முடியும். சரி வாங்க அந்த பொன்னாங்கண்ணி அடை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையினை பொருட்கள்:

  1. பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கைப்பிடியளவு
  2. பாதாம் – 8
  3. சீரகம் – 1/2 ஸ்பூன்
  4. இஞ்சி – ஒரு துண்டு (பொடிதாக நறுக்கியது)
  5. கொத்தமல்லி – சிறிதளவு
  6. கோதுமை மாவு – ஒரு கப்
  7. மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் – 4
  9. உப்பு – தேவையான அளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த டிப்ஸ் மட்டும் போதும் 10 நாட்களில் உடல் எடை குறையும்..!

உடல் எடை குறைய பொன்னாங்கண்ணி கீரை அடை செய்முறை:

பொன்னாங்கண்ணி கீரையை சுத்தமாக அலசி ஒரு பத்திரத்தி சேர்க்கவும், பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு 5 நிமிடம் மட்டும் சுடவைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி கொள்ளுங்கள்.

பிறகு அதில் 1/2 ஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய், பாதாம், இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு கொத்தமல்லி இலையையும் அதில் சேர்த்து அரைக்கவும், வேண்டுமென்றால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். ரொம்ப தண்ணீர் ஊற்றிவிட்டு கூடாது 3 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு அகலமான பவுளிற்கு மாற்றிக்கொள்ளுங்கள், பிறகு அதில் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் நன்றாக பிசைய வேண்டும்.

இவ்வாறு பிசைந்த பிறகு 1/2 மணி நேரம் மாவை ஊறவைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்துக்கொள்ளவும்.

பிறகு தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் பொன்னாங்கண்ணி கீரை அடை தயார்.

இந்த அடையை தினமும் காலை உணவாக இரண்டு சுட்டு சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil