தூங்கும் போது இடது பக்கம் சாய்ந்து தூங்குகிறீர்களா..! அப்போ இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

இடது பக்கம் தூங்குவதால்

நாம் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும் போது பல்வேறு திசைகளில் புரண்டு படுப்போம். அதாவது  குப்புற படுத்து, அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து படுப்போம். ஆனால் மனிதன் எப்படி தூங்க வேண்டும் என்று தெரியுமா.? மனிதனாக பிறந்த அனைவருமே இடது பக்கம் சாய்ந்து தான் தூங்க வேண்டும். இப்படி தூங்கினால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகிறது. அது என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ தூங்கும் போது எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும் தெரியுமா?

இதயத்திற்கு நல்லது:

இதயத்திற்கு நல்லது

இடது பக்கம் சாய்ந்து உறங்கினால் இதயம் சீராக செயல்படும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு வழி வகுக்கிறது.

நெஞ்சு எரிச்சல் தீர்வு:

இரவு சாப்பிட்டு தூங்கியவுடன் சில நபர்களுக்கு உணவு நெஞ்சிலே இருப்பது போல் இருக்கும்.  அதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இந்த மாதிரி பிரச்சனை வராமல் இருப்பதற்கு இடது பக்கம் சாய்ந்து தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறட்டையை எப்படி நிறுத்துவது.?

நீங்கள் மல்லாந்து படுத்து தூங்கும் போது குறட்டை அதிகமாக இருக்கும். அதுவே நீங்கள் இடது பக்கம் சாய்ந்து படுத்தல் குறட்டையை குறைக்கலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

கர்ப்பிணி பெண்கள் வலது பக்கமாக தூங்கினால் கருப்பை ஆனது கல்லீரலை கடினமாக்கும். அதுவே நீங்கள் வலது பக்கம் சாய்ந்து உறங்கினால் இரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரகங்களுக்கு நல்லது.

சாப்பாடு செரிமானம் ஆக:

சாப்பாடு செரிமானம் ஆக

இடது பக்கம் சாய்ந்து தூங்கினால் கழிவுகளை சிறுகுடலிருந்து பெருங்குடலுக்கு ஈசியாக வெளியேற செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இரவில் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

நிணநீர் மண்டலம்:

இடது பக்கமாக உறங்குவது திரவங்களை ஈசியாக வெளியேற்றும். மேலும் நிணநீர் நாளங்களை சீராக செயல்பட  உதவுகிறது.

நீங்கள் இதுவரைக்கும் எப்படி தூங்கினாலும் இந்த பதிவை படித்த பிறகாவது இடது பக்கம் சாய்ந்தவாறு தூங்க முயற்சியுங்கள். ஏனென்றால் உடலுக்கு இடது பக்கம் சாய்ந்து உறங்கும் போதுதான் உடலுக்கு பல ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement