வெள்ளைப்படுதல் குணமாக | Remedy for White Discharge in Tamil | வெள்ளை படுதல் குணமாக என்ன செய்ய வேண்டும்
பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் வெள்ளிப்படுதலும் ஒன்று. இந்த வெள்ளைப்படுதல் வெளிர் மஞ்சள் நிற வெள்ளைப்படுதல் மற்றும் வெள்ளை நிறுத்தல் வெள்ளைப்படுதல் என இரண்டு வகைகளாக இருக்கின்றன. இந்த பிரச்சனை பெரும்பாலும் பெண்கள் பருவம் அடைந்த காலங்களில் இருந்து வரத் தொடங்குகிறது. இத்தகைய வெள்ளைப்படுதல் பிரச்சனையை சாதரணமாக நினைக்காமல் அதனை கவனிக்க வேண்டும். அதனால் இன்றைய பதிவில் நீங்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு சென்று மாத்திரைகள் சாப்பிடாமல் வீட்டு வைத்தியம் மூலம் வெள்ளைப்படுதலை குணப்படுத்துவது எப்படி என்று தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!
சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம் |
White Discharge Treatment Home Remedies in Tamil | வெள்ளை படுதல் குணமாக பாட்டி வைத்தியம் :
வெள்ளிப்படுதல் பிரச்சனை பெண்களுக்கு ஏற்படும் உடல் சூட்டினாலும் வரும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வெள்ளைப்படுதலில் துர்நாற்றம் வீசினால் அது தொற்றாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. இதனை குணமடைய செய்வதற்கான வீடு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளைப்படுதல் குணமடைய:
நெல்லிக்காய் பொடி வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு சிறந்த பலனை அளிக்கிறது. அதனால் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி எடுத்துக்கொண்டு அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை எளிதில் குணமடைந்து விடும்.
வெள்ளைப்படுதல் நோய் குணமாக:
உங்கள் வீட்டில் சாப்பாட்டிற்கு சாதம் வடித்த பிறகு அதில் இருந்து 1/2 கப் அளவிற்கு சாதத்தை எடுத்து அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். 2 மணி நேரம் கழித்த பிறகு சாதம் ஊறிய அந்த தண்ணீரை குடித்தால் வெள்ளைபடுதல் விரைவில் சரியாகிவிடும்.
Vellai Paduthal Maruthuvam:
1 டம்ளர் பாலை நன்றாக காய்ச்சி பிறகு பால் மிதமான சூட்டில் இருக்கும் போது அதனுடன் 1/2 ஸ்பூன் பனங்கற்கண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால் வெள்ளைபடுதல் பிரச்சனையும் இருக்காது மற்றும் கிருமிகள் தொற்றும் இருக்காது.
Vellai Paduthal Treatment in Tamil:
அன்னாசிப்பூ வெள்ளைப்படுதலுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது. அதனால் 1 அன்னாசிப்பூவை எடுத்துக்கொண்டு அதனை பொடியாக தயார் செய்து அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளர் அளவிற்கு வந்தவனுடன் அதனை வடிகட்டி குடித்தால் வெள்ளிப்படுதல் பிரச்சனை உங்களுக்கு இருக்காது.
வெள்ளைப்படுதல் குணமாக மருந்து:
வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகுவதற்கு சிறிதளவு மல்லி விதைகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். பின்பு மறுநாள் காலையில் ஊற வைத்துள்ள மல்லி விதையில் இருக்கும் தண்ணீரை குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும்.
இதையும் படியுங்கள்⇒ வெள்ளைப்படுதல் ஏற்பட காரணம் அதனை தடுப்பதற்கான வழிகள்.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |