சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டிய சில உடற்பயிற்சிகள்..!
Yoga for Diabetes in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் சர்க்கரை நோயாளிகள் தினந்தோறும் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு மனிதனுக்கு வருவது என்பது மிக சாதாரணமான விஷயமாக ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என்று சொல்லலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையான வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சில விதிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. அந்த வகையில் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், அவர்களது சர்க்கரை அளவை சமச்சீராக வைத்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. அது என்னமாதிரியான உடற்பயிற்சி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
விருக்சாசனம்:
சர்க்கரை நோய் உடற்பயிற்சி:- சர்க்கரை நோயாளிகள் செய்யக்கூடிய ஆசனங்களில் ஒன்றுதான் விருக்சாசனம். இந்த ஆசனம் செய்வதன் மூலம் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமசீராக வைத்து கொள்ளமுடியும். இந்த ஆசனம் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் செய்ய வேண்டும். இந்த விருக்சாசனத்தை 30 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும். இதனை செய்து வருவதால், கணையங்களை நன்கு வேலை செய்ய தூண்டும். குறிப்பாக ஹார்மோன்களை சீரான அளவில் இந்த ஆசனம் சுரக்க செய்யும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் நல்ல பலனை அடைய முடியும்.
லெக் அப் வால் போஸ் (Legs Up The Wall):
Yoga for Diabetes in Tamil – இந்த லெக் அப் வால் போஸ் ஆசனத்தை சர்க்கரை நோயாளிகள் செய்வதன் மூலம் உங்கள் உடலை முற்றிலுமாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. மேலும், உங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்த ஹார்மோனின் அளவையும் குறைக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம் என்பதற்கு அவர்களின் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆகவே இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்க கூடும். சரி இந்த ஆசனம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி கீழ் காண்போம்.
சர்க்கரை நோய் உடற்பயிற்சி:- முதலில் வலது புறமாக சுவர் இருக்கும் படி தரையில் அமர்ந்து, கால்களை நீட்டிக் கொள்ளவும். இப்போது மெதுவாக, இரண்டு கால்களையும் சுவற்றின் மீது நீட்டிய படி தூக்கவும். தூக்கும் போது அப்படியே தரையில் படுத்துக் கொள்ளவும். கால்கள் நேராக சுவற்றின் மீது 90 டிகிரி கோணத்திலும், உடம்பு தரையோடு தரையாகவும் இருக்க வேண்டும். கைகளை தரையின் மீது நீட்டி வைத்துக் கொள்ளவும். இதே நிலையில் ஒரு 15 நிமிடங்களுக்கு இருந்தால் போதும். அந்த 15 நிமிடமும் மூச்சை நன்கு இழுத்து விட மறவாதீர்கள். பின்னர், கால்களை மடக்கி, மார்போடு சாய்த்து பிடித்துக் கொண்டு பழைய ஆரம்ப நிலைக்கே உருண்டு வந்து உட்கார்ந்திடவும்.
ஹலாசனம்:
சர்க்கரை நோய் உடற்பயிற்சி:- இந்த ஹலாசனம் செய்வதற்கு முதலில் உங்களுக்கு விபரீத கரணி, சர்வாங்கசனம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். பஷ்ச்சி மோஸ்தாசனத்திற்கு ஹலாசனா ஒரு வகையில் உதவி ஆசனம் என்று கூறலாம். மாறாக புஜங்காசனம், சக்ராசனம், மத்ஸ்யாஸனம் ஆகியவை ஹலாசன நிலைக்கு ஒரு வகையில் எதிர் மாறான நிலையாகும். இதற்கான பயிற்சி முறையை கீழ் காண்போம்.
- ஹலாசனத்தை சிறந்த முறையில் பயிற்சி செய்ய முதலில் அர்த்த ஹலாஸன நிலையை எடுத்துக் கொள்வது சிறந்தது.
- ஆனால் கைகளில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
- கைகள் தரையில் அழுந்தி இருந்தாலும் மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள்.
- இரண்டு கால்களை ஒன்று சேர்த்து 90 டிகிரிக்கு உயர்த்தவும்.
- உள்ளங்கைகளை பூமியின் மீது அழுத்தி இடுப்பை உயர்த்தி கால்களை பின்புறமாக கொண்டு வரவும்.
- சிறிது சிறிதாக முயற்சித்து கால்கட்டை விரல்களை தரையின்மீது வைக்கவும். கால்களை மடிக்காது நீட்டி வைக்கவும்.
- உடல் எடை முழுவதையும் தோள்பட்டைகளில் வைத்து கைகளை எடுத்து தலைக்கு மேல் கொண்டு வரவும். கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு உச்சந்த தலையை பிடித்து கை முட்டிகளை தரை மீது வைக்கவும்.
- சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருக்கவும்.
- கை விரல்களை பிரித்து கையை முதுகுபுறம் கொண்டு வரவும். உள்ளங்கையால் பூமியை அழுத்தி கால் விரல்களை பூமியிலிருந்து பிரித்து கால்களை உயர்த்தவும். மெதுவாக விரிப்பின் மீது படுத்து கால்களை தரையை நோக்கி கொண்டு வந்து வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |