உங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை..! Porridge for Babies in Tamil ..! குழந்தைகளுக்கு கஞ்சி வகைகள்..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..!
இன்றைய பொதுநலம் பதிவில் உங்களுடைய செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி வகைகளை பற்றி பார்ப்போம். குழந்தையின் முதல் உணவு என்று சொன்னாலே நாம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது கஞ்சி உணவு மட்டும்தான். அந்த கஞ்சியை நம் குழந்தைகளுக்கு சத்தாகவும், சுவையாகவும் செய்து குடுத்தால் மட்டுமே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கான கஞ்சி வகைகளில் திணை கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, ராகி கஞ்சி, சோளம் கஞ்சி, கம்பு கஞ்சி, அரிசி கஞ்சி, வரகு கஞ்சி இது மாறி நிறைய வகையான கஞ்சி வகைகள் குழந்தைகளுக்காக உள்ளது.
இத்தனை வித விதமான கஞ்சி வகைகளை நம் குழந்தைகளுக்கு தினமும் செய்து குடுக்கலாம். கஞ்சி வகைகளில் குழந்தைகளுக்கு நிறைய சத்து உள்ளது. அதனால் இந்த பதிவில் நாங்கள் கூறியுள்ள கஞ்சி வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு சுவையுடன் செய்து குடுத்து மகிழுங்கள். சரி வாங்க இப்போ கஞ்சி வகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்..!
அழுகும் குழந்தையை அமைதிப்படுத்த சூப்பர் வழி..! |
குழந்தைக்கு கஞ்சி வகைகள் / Porridge for Babies in Tamil – ராகி கஞ்சி – தேவையான பொருட்கள்:
- ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை – 2 டீஸ்பூன்
- நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
குழந்தைக்கு கஞ்சி வகைகள் – ராகி கஞ்சி/ குழந்தைகளுக்கு கேழ்வரகு கஞ்சி செய்முறை விளக்கம்:
முதலில் பாத்திரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடேற்றிகொள்ளவும். அதன்பிறகு ராகி மாவை 1/4 டம்ளர் அளவு தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். ராகி மாவை நன்றாக கரைத்தபின் அடுப்பில் வைத்திருந்த பாத்திரத்தில் ஊற்றவும்.
இதனை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளற வேண்டும். கிளறியபின் அதனுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரையை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும். இதனுடன் நட்ஸ் பவுடர் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதாங்க ராகி கஞ்சி ரெடி.
அடுப்பை நிறுத்திவிட்டு இளஞ்சூடாக வந்ததும் இதை குழந்தைகளுக்கு குடுக்கலாம். இதை 6 மாதம் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்காமலே தாராளமாய் கொடுக்கலாம். கண்டிப்பா உங்க குழந்தைக்கு வீட்ல இத செஞ்சி ஊட்டி பாருங்கள். எல்லா குழந்தைகளும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..! |
குழந்தைக்கு கஞ்சி வகைகள் / Porridge for Babies in Tamil – சோள கஞ்சி தேவையான பொருட்கள்:
- சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்(வெள்ளை சோளம்)
- கேரட் ப்யூரி – ¼ கப்
- இந்துப்பு – சிறிதளவு
- நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
குழந்தைக்கு கஞ்சி வகைகள் – சோள கஞ்சி செய்முறை விளக்கம்:
பாத்திரத்தில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடேற்றிகொள்ளவும். பின் சோளமாவை 1/4 டம்ளர் அளவுக்கு தண்ணீரில் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். இதனை சூடான தண்ணீரில் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில் 3 நிமிடம் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வேகவைத்த பிறகு இதனுடன் கேரட் ப்யூரி 1/4 கப் சேர்த்து கொள்ளவும். கேரட் ப்யூரி நன்றாக வெந்த பின் இந்துப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி கொஞ்சம் மேலே தூவிட்டு இறக்கி கொள்ளவும். சோள கஞ்சி ரெடி ஆகிட்டு. இதை 6 மாதம் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உப்பு சேர்க்காமல் கூட குடுக்கலாம்.
குழந்தைக்கு கஞ்சி வகைகள் / Porridge for Babies in Tamil – வரகு கஞ்சி தேவையான பொருட்கள்:
- வரகு – ½ கப்
- பாசி பருப்பு – 1/4 கப்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- வெந்தயம் – ¼ டீஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- இந்துப்பு – சிறிதளவு
குழந்தைக்கு கஞ்சி வகைகள் – வரகு கஞ்சி செய்முறை விளக்கம்:
முதலில் குக்கரில் நெய் ஊற்றி அதனுடன் சீரகம், வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். அதன் பிறகு பாசி பருப்பை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ள வேண்டும். நன்றாக பருப்பு ஊறிய பின் வரகு 1/2 கப் சேர்த்து குக்கரில் போட்டு அதனுடன் இந்துப்பு, மஞ்சள் தூள் போட்டு சேர்க்கவும்.
தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு 3 விசில் வந்த பிறகு வரகு கஞ்சியை இறக்கவும். அவ்ளோதாங்க இந்த வரகு கஞ்சி. இது ரொம்ப கஷ்டம் எல்லாம் இல்லங்க ஈஸியா வீட்டில உள்ள, உங்க செல்ல குழந்தைக்கி செஞ்சி குடுத்தீங்கனா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |