குழந்தைகளை வளர்ப்பது எப்படி.?
அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். குழந்தைகள பெற்றோர்கள் வளர்ப்பதில் தான் அவனின் எதிர்காலம் உள்ளது. குழந்தைகள் அவர்கள் வளருற படி வளரட்டும் என்று விட கூடாது. குழந்தை வளர்ப்பு என்பது நாம் நினைப்பதை விடவும் சாவாலான ஒன்று. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது போன்றவற்றை எடுத்து கூறி வளர்க்க வேண்டியது அவசியம். அப்போது தான் குழந்தைகளிடம் நல்ல பண்புகள் உண்டாகும். இது போன்ற நற்பண்புகள் குழந்தைகளை சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக உருவாக்கும். வாங்க எப்படி வளர்க்க வேண்டும் என்று படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ வளரும் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய தகவல்கள் என்ன..!
உணர்வு வெளிப்பாடு:
முதலில் உங்கள் குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கவலையில் இருந்தால் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்க வேண்டும். அவர்கள் பதிலை கேட்டு அதற்கான முடிவுகளை சொல்ல வேண்டும். உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு உணர்வையும் புரிந்து நடந்து கொண்டால் குழந்தைகள் உங்களிடம் நண்பர்கள் போல் பழகுவார்கள். எந்த பிரச்சனை அவர்களுக்கு நடந்தாலும் உங்களிடம் தெரியப்படுத்துவார்கள்.
அடிப்பது போல கோபம் வரும்:
பெற்றோருக்கும், குழந்தைக்கும் சண்டை வரும் போது கத்துவது, அடிப்பது போன்ற செயல்களில் பெற்றோர்கள் செய்வார்கள். சண்டை வரும் போது மனதை அமைதிப்படுத்துங்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் குழந்தை கோபம் படமாட்டான்.
நல்லது கெட்டது:
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் எது என்று ஆராய கற்று கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மற்றவர்களிடம் பழகும் போது எந்த பழக்கம் நல்லது கெட்டது என்று தேர்வு செய்வார்கள்.
உரையாட வேண்டும்:
உங்கள் குழந்தைகளுடன் தினமும் பேச வேண்டும். அவர்களிடம் பேசும் போது பள்ளியில் நடந்த விஷயங்களை கேட்க வேண்டும். பள்ளிக்கு செல்லும் வழியில் நடந்தது என்று நீங்கள் ஒரு நாள் கேட்க ஆரம்பித்தால் மறு நாளிலிருந்து அவர்களே சொல்லி விடுவார்கள். குழந்தைகளை பாராட்ட வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்தீர்கள் என்றால் உங்கள் குழந்தைகள் ஒழுக்கமுள்ள குழந்தையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |