At What Age Should Eggs Be Given To A Child
இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். ஒரு குடும்பத்தில் இருக்கும் சந்தோசம் எது என்றால் அது குழந்தைகள் தான். ஒரு வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். சரி நாம் இன்று இந்த பதிவில் என்ன தெரிந்து கொள்ள போகிறோம் என்று பார்ப்போம். பொதுவாக பிறந்த குழந்தைக்கு 6 மாதத்திற்கு மேல் தான் ஏதாவது உணவு கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
அது போல குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்ன உணவு கொடுக்க கூடாது என்ற கேள்விகள் இருக்கும். அந்த வகையில் பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் இருந்து முட்டை கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
குளிர்க்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்களை இப்படி கொடுத்தால் சளி பிடிக்காது..! |
எந்த வயதில் குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும்..?
முட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பிறந்த 6 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்ற கேள்விகள் அதிகம் இருக்கும். அப்படி இருக்கும் கேள்விகளில் ஓன்று தான் குழந்தைக்கு முட்டை கொடுக்கலாமா..? எந்த வயதில் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கும்.
முந்தைய ஆய்வின் படி குழந்தைக்கு 2 வயதிற்கு மேல் தான் முட்டை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் தற்பொழுது கூறிய ஆய்வின் படி 6 மாதத்திற்கு மேல் குழந்தைகள் திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் முட்டை கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்=> குழந்தைகளுக்கு நெஞ்சு சளி, இருமல் குணமாக மாத்திரை, மருந்து,கஷாயம் தேவையில்லை.!
அதாவது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் முட்டைகளை கொடுக்கலாம். அதுவும் 6 மாதங்களுக்கு மேல் தான் முட்டைகளை கொடுக்க வேண்டும். அதுபோல உங்கள் குழந்தைகள் தானாக எழுந்து உட்காரவோ, அல்லது நடக்கவோ தொடங்கும் போது தாராளமாக முட்டைகளை கொடுக்கலாம்.
எப்படி கொடுக்க வேண்டும்..?
குழந்தைக்கு முட்டைகளை வேகவைத்து தான் கொடுக்க வேண்டும். வேகவைத்த முட்டையை நன்கு மசித்து தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் முட்டை விரைவாக செரிமானம் ஆகாது. அதனால் மசித்து கொடுப்பது நல்லது.
அதுபோல ஒரு நாளைக்கு 1 முட்டை தான் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் குழந்தைக்கு முட்டை கொடுக்கும் நேரத்தில் அவர்களுக்கு உடலில் ஏதாவது மாற்றம் அதாவது அரிப்பு, தடிப்புகள், தோல் சிவத்தல், கண்களின் தண்ணீர் வடிதல், கண்கள் சிவத்தல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் முட்டை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பின் மருத்துவரை அணுகுவது நல்லது..!
இதையும் படியுங்கள்=> குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம்..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |