குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..! Baby Cold And Cough Remedy..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் குழந்தைக்கு சளி இருமல் போன்ற பிரச்சனையை தடுக்க சில வீட்டு வைத்தியத்தை பற்றி பார்ப்போம். பொதுவாகவே குழந்தைகளுக்கு மழை காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனை வருவது இயல்பு தான். சில குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக இருப்பதனால் கூட இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தங்களின் குழந்தைக்கு சளி, வறட்டு இருமல்(Kids Cough Home Remedies) போன்றவை வராமல் இருக்க வீட்டிலே எளிய வைத்தியம் செய்து குழந்தையின் சளி பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
![]() |
குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக டிப்ஸ் 1:
கற்பூரம் / சூடம்
Baby Cough Remedy: முதலில் கற்பூரத்தை தூள் செய்து வைத்து கொள்ளுங்கள். அதன்பிறகு தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்துக்கொண்டு சூடேற்றி, எண்ணெயில் கற்பூர தூளை போடவும்.
இது நன்றாக ஆறிய பிறகு 4 அல்லது 5 சொட்டுகளை எடுத்து கையில், உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியின் நடுவில் நன்றாக தடவி விடவும்.
கற்பூரத்தை அதிகளவு பயன்படுத்தாமல் கம்மியாக பயன்படுத்த வேண்டும். குழந்தையின் சருமத்தை கற்பூரம் பாதிக்கும் என்பதால் கம்மியான அளவு பயன்படுத்திக்கொள்ளவும்.
குழந்தைகளுக்கு சளி இருமல் போக டிப்ஸ் 2:
யூகலிப்டஸ் ஆயில்
குழந்தைக்கு சளி இருமல் அதிகமாக இருந்தால் யூகலிப்டஸ் ஆயிலை குழந்தையின் மூக்கில் வைத்து சுவாசிக்க வைக்க வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் குழந்தை படுக்கும் இடத்தில் சிறிதளவு யூகலிப்டஸ் ஆயிலை தெளித்து கூட விடலாம். குழந்தையின் சளி இருமல்(Kids Cough Home Remedies) பிரச்சனை நீங்கும்.
குழந்தைக்கு சளி, இருமல் விரட்ட டிப்ஸ் 3:
சாய்வான முறையில் குழந்தையை தூங்க வைத்தல்
உங்கள் குழந்தைக்கு சளி இருமல் தொல்லை இருக்கிறது என்று கவலை கொள்ளாதீர்கள். குழந்தைக்கு பயன்படுத்தும் தலையணையை குழந்தையின் முதுகு பின் சாய்வாக வைத்து தூங்க வைய்யுங்கள்.
இப்படி குழந்தையை சாய்வாக தூங்க வைப்பதினால் குழந்தையின் மூக்கில் இருந்து சளி வெளியேறி குழந்தை நிம்மதியாக தூங்கும்.
குழந்தைக்கு சளி இருமல் வராமல் தடுக்க டிப்ஸ் 4:
பூண்டு
Kids Cough Home Remedies: முதலில் 2 பூண்டை எடுத்து உரித்துவைத்து கொள்ளவும். அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின் சளி இருமல் உள்ள குழந்தைக்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு கொடுக்கவும்.
குறிப்பு: இந்த பூண்டு வேகவைத்த நீரை 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தாராளமாய் கொடுக்கலாம்.
குழந்தைக்கு சளி இருமல் குறைய டிப்ஸ் 5:
சிக்கன் சூப்
Baby Cough Home Remedies: குழந்தைகளுக்கு அதிக அளவிற்கு சளி இருமல் தொல்லை இருந்தால் சிக்கன் சூப் கொடுத்தால் குழந்தைக்கு சளி தொல்லை இருக்காது.
குறிப்பு: சிக்கன் சூப்பை குழந்தை 8 மாதம் ஆன பிறகு யோசிக்காமல் தாராளமாய் கொடுத்து பழகலாம்.
![]() |
குழந்தைகளின் சளி, இருமலை போக்கும் டிப்ஸ் 5:
தேன்
1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு சளி தொல்லை இருந்தால் அரை டீஸ்பூன் தேன் எடுத்து அதை பாலில் கலந்து தினமும் இரு வேளை குழந்தைக்கு கொடுக்கலாம். சளி இருமல் தொல்லை இருக்காது.
குழந்தைக்கு நெஞ்சு சளி இருமல் குணமாக டிப்ஸ் 6:
நெய்
Kids Cough Home Remedies: முதலில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை எடுத்து நன்றாக சூடாக்கி கொள்ளவும். அதன் பிறகு 2 முதல் 3 மிளகை போட்டு அரைத்துக்கொள்ளவும்.
இதனை வறட்டு இருமலால் அவதிப்பட்டு வரும் குழந்தைக்கு கொடுங்கள்.
குறிப்பு: 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு தாராளமாய் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் குணமாக டிப்ஸ் 7:
விக்ஸ்
Kids Cough Home Remedies: வீட்டில் எப்போதும் குழந்தைகளுக்கு விக்ஸ் வாங்கி வைத்திருப்பது மிகவும் நல்லது. குழந்தைக்கு சளி தொல்லை ஏற்படும் போது கால் பாதத்தில், மார்பு பகுதியில் மற்றும் தொண்டைகளில் விக்சை தடவி வந்தால் சளி தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் என்ன செய்வது டிப்ஸ் 8:
சலைன் டிராப்ஸ்
Baby Cough And Cold Remedy: குழந்தையின் சளி இருமல் மூக்கடைப்பு போன்ற அனைத்து வித நோய்களுக்கும் சலைன் டிராப்ஸ் சிறந்து விளங்குகிறது.
2 முதல் 3 சலைன் டிராப்ஸ் சொட்டுகளை மூக்கின் துவாரங்களில் விட்டு குழந்தையை சாய்ந்து படுக்கும் படி செய்யவேண்டும்.
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் என்ன செய்வது டிப்ஸ் 9:
கடுகு எண்ணெய்
Baby Cough And Cold Remedy in tamil: முதலில் 5 அல்லது 10 ஸ்பூன் கடுகை எண்ணெய் எடுத்து எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் ஓமத்தை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
இந்த கலவை நன்றாக ஆறிய பிறகு தனியாக பாட்டிலில் எடுத்துவைத்து தேவைபடும் போது அதாவது குழந்தைக்கு சளி தொல்லை இருக்கும் போது இதனை எடுத்து குழந்தையின் மார்பு பகுதி, நெற்றி மற்றும் தொண்டையில் தடவ வேண்டும்.
குழந்தைக்கு சளி இருமல் குணமாக டிப்ஸ் 10:
துளசி இலை
Kids Cough Home Remedies: துளசியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.
தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை சளி இருமல் தொல்லை உள்ள குழந்தைக்கு தயங்காமல் கொடுக்கலாம்.
குறிப்பு: 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை கொடுக்க வேண்டும்.
![]() |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |