குழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம் | Baby Stomach Pain Home Remedy
குழந்தைகளுக்கு வயிற்று வலி வருவது மிகவும் சாதாரண விஷயம் தான், குழந்தைகளுக்கு வயிற்று வலி வர பல காரணங்கள் உள்ளது இருப்பினும் அந்த காரணங்களை தெரிந்து கொண்டாலே போதும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி பிரச்சனையை சரி செய்துவிட முடியும். சரி வாங்க குழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம் என்ன உள்ள என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
குழந்தைக்கு வயிற்று வலி வர காரணங்கள்:
குழந்தைக்கு வயிற்று வலி வர கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் மிக முக்கிய காரணங்கள் ஆகும்.
வாயுத் தொல்லை, தாய்ப்பால் தருவதில் ஏதேனும் பிரச்சனை, குழந்தைக்கு உணவு தருவதில் ஏதேனும் பிரச்சனை, அதேபோல் குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை ஊட்டிவிடுவது, காலிஃப்ளவர், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்களை அதிகமாக உண்ணுதல், பாலில் உள்ள லாக்டோஸ் உடலில் அதிகமாவது, சீரற்ற செரிமான இயக்கம், குழந்தைக்கு மலச்சிக்கல், அதேபோல் குழந்தை மலம் கழிக்காமல் சிரமபடுதல், குழந்தையின் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருப்பது ஆகியன குழந்தைகளுக்கு வயிற்று வலி வர மிகவும் முக்கிய காரணங்கள் ஆகும்.
| இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!! |
குழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்..!
குழந்தையின் வயிற்று வலியை தாய்ப்பால் மூலமாக சரி செய்ய தாய்மார்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள்:
குழந்தைக்கு வயிற்று வலி குறைய – பூண்டு:
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடும் உணவில் அதிகளவு பூண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு உணவில் பூண்டு அதிகம் சேர்த்து கொள்வதினால் தாய்ப்பால் வழியாக பூண்டு சத்து குழந்தைக்கு சேர்வதால் குழந்தையின் வயிற்று வலி குணமாகும்.
குழந்தை வயிற்று வலி மருத்துவம் – இளஞ்சூடான ஓத்திடம்:-
குழந்தையின் வயிற்று வலி குறைய (Baby Stomach Pain Home Remedy), குழந்தையின் வயிற்றில் இளஞ்சூடான ஒத்தடத்தை 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொடுப்பதினால், குழந்தையின் வயிற்றில் இரத்த ஓட்டம் நன்கு சுரக்கும். இதனால் குழந்தையின் வயிற்று வலி குணமாகும்.
குழந்தைக்கு மசாஜ் செயுங்கள்:
குழந்தையை சமமான தளத்தில் படுக்க வைத்து, குழந்தையின் வயிற்றில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள்.
தொப்புள் சுற்றி எண்ணெயைத் தடவுங்கள். இதனால் செரிமானம் சீராகும். வாயு நீங்கும். குழந்தையின் வயிற்று வழியும் சரியாகிவிடும்.
குழந்தைக்கு வயிற்று வலி சரியாக பெருங்காயம்:-
இளஞ்சூடான நீரில் சிறிதளவு பெருங்காய தூளை கலந்து, நன்றாக குழைத்து கொள்ளவும், இந்த பேஸ்டை குழந்தையின் தொப்புளில் தடவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் வாயு தொல்லை நீங்கும். இதனால் குழந்தையின் வயிற்று வலியும் குறைந்து விடும்.
குழந்தையின் பாதத்தை லேசாக அழுத்தி விடுங்கள்:-

குழந்தையின் பாதத்தில் நடுப்பகுதியில் உள்ள புள்ளிகள் வயிறு தொடர்பானவை. அங்கு சில நொடிகள் வரை மிதமான அழுத்தம் கொடுக்க கொடுக்க குழந்தையின் வயிறு வலி பிரச்சனை சரியாகும்.
குழந்தை வயிற்று வலி மருத்துவம் – இஞ்சி:-
குழந்தைக்கு வயிற்று வலி குறைய (Baby Stomach Pain Home Remedy) சிறிதளவு இஞ்சியை பொடிதாக சீவி, ஒரு டம்பர் சூடான நீரில் துருவிய இஞ்சியை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி குழந்தைக்கும் கொடுக்க வேண்டும்.
இந்த நீர் குழந்தைக்கு வயிற்று வலியை (Baby Stomach Pain Home Remedy) சரி செய்யும். இந்த கை வைத்தியத்தை இரண்டு வயது முடிந்த குழந்தைக்கும் பின்பற்ற வேண்டிய, கை வைத்தியம் ஆகும்.
ஓமம் தண்ணீர் வயிற்று வலி நீங்க:
ஓமம் ஆனது செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. ஒரு தேக்கரண்டிஓமம் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை வடிகட்டி ஆறியதும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஓமம் தண்ணீர் கூட கொடுக்கலாம்.
புதினா இலை:
புதினா இலை ஆனது குளிர்ச்சி தன்மை உடையது. இவை வயிற்றில் இருக்கும் பிரச்னையை சரி செய்ய கூடியது. அதனால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ள வேண்டும்.
குறிப்பு:
மேல் கூறியுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த குறிப்பை பயன்படுத்தியும் குழந்தைக்கு வயிற்று வலி நிற்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
| குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..! |
| இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |














