குழந்தைகளுக்கு முக்கியமாக தர வேண்டிய ஜூஸ் வகைகள்..! Health Drinks For Babies..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வெயில் காலத்திற்கு ஏற்ற வகையில் குழந்தைக்கு (childrens health energy drinks) என்ன மாதிரியான குளிர்பானங்களை கொடுக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் வரும். இவற்றை எல்லாம் கோடை காலத்தில் தவிர்க்க எளிமையான ஜூஸ் வகைகளை கொடுத்து எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
![]() |
ஆப்பிள் – டேட்ஸ் மிக்ஸிங் ஜூஸ்:
தேவையான பொருள்: ஆப்பிள் – 1, பேரீச்சை – 7, தேங்காய்ப்பால் – 1 டம்ளர், நட்ஸ் பொடி – 1 டீஸ்பூன்.
செய்முறை விளக்கம்: பேரீச்சையில் உள்ள கொட்டை பகுதிகளை நீக்கி கொள்ளவும். அதனுடன் ஆப்பிளின் கொட்டைகளை அகற்றிவிட்டு அதனுடைய தோல் பகுதிகளையும் நீக்கிவிட வேண்டும். இப்போது மிக்ஸி ஜாரில் கொட்டை நீக்கிய பேரீச்சை பழம், தோல் சீவி வைத்துள்ள ஆப்பிள், தேங்காய்ப்பால் மற்றும் நட்ஸ் பொடியினை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழலாம்.
இந்த ஜூஸ் குழந்தைக்கு கொடுப்பதினால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இரத்த சோகை நீங்கி உடலில் இரத்தம் உற்பத்தி ஆகும்.
குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஆப்பிள் ஜூஸ்:
ஜூஸ் வகைகள்: குழந்தைக்கு தினமும் ஆப்பிள் கொடுத்து வந்தால் நிறைய சத்துக்கள் குழந்தைக்கு கிடைக்கும். ஆப்பிள் தினமும் எடுத்து கொண்டால் வயது ஆனாலும் இளமையான தோற்றத்துடன் இருப்பார்கள்.
சிறிய குழந்தைக்கு ஆப்பிள் கொடுக்கும் போது நன்றாக வேக வைத்து பின்னர் ஆப்பிளை மசித்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும். பெரிய குழந்தைகளுக்கு ஆப்பிளுடன் சிறிதளவு பாலை சேர்த்து ஜூஸ் முறையில் செய்து கொடுக்கலாம்.
வைட்டமின் சத்து நிறைந்த ஆரஞ்ச் ஜூஸ்:
இந்த ஆரஞ்சில் ஏராளமான வைட்டமின் சத்து அடங்கியுள்ளது. ஆரஞ்ச் சாப்பிடுவதினால் குழந்தைக்கு சளி ஏற்படும் என்பதெல்லாம் தவறு. குழந்தைகளுக்கு இந்த பழத்தை உரித்தும் கொடுக்கலாம்.
அப்படி இல்லையென்றால் ஜூஸ் முறையில் கொடுத்தால் சிறிதளவு தண்ணீர் சுட வைத்து இதனுடன் ஆரஞ்ச் ஜூஸ் கலந்து கொடுக்கலாம்.
இந்த முறையில் கொடுத்தால் சளி போன்ற பிரச்சனைகள் குழந்தைக்கு வராது. இந்த ஜூஸில் சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்த்து கொள்ளலாம்.
தர்பூசணி ஜூஸ்:
வெயில் காலத்தில் எளிமையாக கிடைக்க கூடிய ஒன்றுதான் இந்த தர்பூசணி பழம். இந்த பழத்தை சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாய் உண்ணலாம்.
குழந்தைக்கு தர்பூசணியில் உள்ள விதைகளை அகற்றிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி குழந்தைக்கு கொடுக்கலாம்.
தர்பூசணியை கட் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தும் குழந்தைக்கு கொடுக்கலாம். இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் தேன், நாட்டு சர்க்கரை 1 ஸ்பூன் சேர்த்து ஜூஸ் முறையில் கொடுத்து பழகலாம்.
![]() |
குழந்தைக்கு சத்து நிறைந்த கிரிணிப்பழ ஜூஸ்:
இந்த கிரிணிப்பழத்தில் அதிகமாக வைட்டமின் சத்து, மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தை குழந்தைகளுக்கு மிக்ஸியில் போட்டு பால், நாட்டு சர்க்கரை சேர்த்து ஜூஸாகவும் கொடுக்கலாம்.
இல்லையென்றால் கிரிணிப்பழத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துகூட குழந்தைக்கு கொடுக்கலாம். இந்த பழம் சாப்பிடுவதால் குழந்தைக்கு வெயில் காலங்களில் ஏற்படும் வியர்க்குரு, கட்டிகள், கொப்பளம், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளை தடுக்கும்.
குழந்தைக்கு திராட்சை ஜூஸ் நன்மை:
ஜூஸ் வகைகள்: இந்த திராட்சை பழத்தை குழந்தைக்கு ஜூஸ் முறையில் கொடுக்கும் போது திராட்சயை அவித்த பின் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஜூஸ் செய்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளி பிரச்சனை இருக்காது.
அடுத்த முறை ஃப்ரெஷாகவும் திராட்சை பழத்தை சுத்தம் செய்து விட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.
குழந்தை சத்து பெற மாதுளை ஜூஸ்:
இந்த மாதுளை பழ ஜூஸை மாதுளையில் உள்ள விதையுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதன் பிறகு அரைத்ததுடன் பால், சர்க்கரை சிறிதளவு சேர்த்து கூட குழந்தைக்கு கொடுக்கலாம்.
மாதுளையானது நமது உடல் நரம்புகளுக்கு, வயிற்று புண், வயிற்றில் உள்ள பூச்சிகள், மூளை மந்தமான நிலையில் இருக்கிறது என்றால் இந்த மாதுளை பழமானது மிகவும் நல்லது.
![]() |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips Tamil |