குளிர்க்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்களை இப்படி கொடுத்தால் சளி பிடிக்காது..!

Advertisement

How to Give Fruits to Babies in Winter Season in Tamil

பொதுவாக  குளிர்க்காலம் வந்துவிட்டாலே நமது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவு கொடுக்க வேண்டும். அதனை எவ்வாறு கொடுத்தால் அவர்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்பதை பற்றி பலரும் சிந்தித்திருப்பீர்கள். அப்படி நீங்களும் சிந்தித்து இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் குளிர்க்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்களை எப்படி கொடுத்தால் சளி பிடிக்காது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படியுங்கள்=> குழந்தைகளுக்கு நெஞ்சு சளி, இருமல் குணமாக மாத்திரை, மருந்து,கஷாயம் தேவையில்லை

How to Give Fruits to Babies in Winter Season in Tamil:

How to Give Fruits to Babies in Winter Season in Tamil

குளிர்க்காலம் வந்துவிட்டாலே சிலர் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுப்பதை தவிர்ப்பார்கள். இதற்கு காரணம் பழங்களில் உள்ள அதிகப்படியான நீர்சத்தினால் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனை வந்துவிடும் என்பதால் தான். அதனால் குழந்தைகளுக்கு குளிர்க்காலத்தில் பழங்களை எவ்வாறு கொடுப்பது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு பழங்களை எவ்வாறு அளிப்பது:

இப்பொழுது குழந்தைகளுக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை பழம் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை அளிக்கிறீர்கள் என்றால் அதனை முதலில் ஜூஸாக தயாரித்துக் கொள்ளுங்கள்.

 பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சூடுபடுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தயாரித்து வைத்துள்ள ஜூஸினை ஒரு டம்ளர் அல்லது சிறிய பாத்திரத்தில் ஊற்றி நாம் சூடுபடுத்தி வைத்துள்ள தண்ணீரின் மீது வைத்து லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்=> குழந்தைகளின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை முற்றிலும் நீக்க பாட்டி வைத்தியம்

பிறகு அதனை உங்களின் குழந்தைகளுக்கு கொடுங்கள் அவர்களுக்கு சளி பிடிக்காது.

 அதேபோல் நீங்கள் குழந்தைக்கு வாழைப்பழத்தை கொடுக்க போகிறீர்கள் என்றால் அதனை முதலில் நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு மசித்து கொடுங்கள். இந்த மசித்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.  

இப்படி குளிர்க்காலத்தில் பழங்களை கொடுப்பதன்  மூலம் அவர்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 

 

Advertisement