அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி.?
குழந்தை அழுதால் சமாதானப்படுத்துவது தாய்மார்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். முதலில் குழந்தை எதற்காக அழுகிறது என்றே தெரியாது. சில நபர்கள் குழந்தை அழும் போது அந்த பக்கமே போக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சமாதானம் செய்ய தெரியாது. குழந்தை அழுதாலே சில பேருக்கு பிடிக்காது. அழுகும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதற்கு ஈஸியான வழிகளை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க…
இதையும் படியுங்கள் ⇒ குழந்தையை தூங்க வைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களா.! இனிமேல் இந்த மாதிரி பண்ணுங்க
குழந்தையை தூக்கி கொண்டு நடக்க வேண்டும்:
முன்னோர்கள் எல்லாம் குழந்தை அழுதால் தொட்டியில் போட்டு தாலாட்டு பாடுவார்கள் குழந்தை அழுகையை நிறுத்திவிடும். அவர்களுக்கு ஏதும் உடம்பில் பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களே மருந்துகளை கொடுத்துவிடுவார்கள். இப்போது அப்படியா குழந்தை எதற்கு அழுகிறதே என்றே தெரியவில்லை.? குழந்தை எவ்வளவு தான் அழுதாலும் அம்மா தூக்கி கொண்டு நடக்கும் போது அழுகிற பிள்ளை சமாதானம் ஆகும். அதுவே அந்த குழந்தையை வைத்து தாலாட்டு பாடும் போது சமாதானம் ஆகாது.
குழந்தையை அம்மா அரவணைப்பில் இருக்கும் போது அழுகாது. அதனால் குழந்தைகள் அழுதாலே அம்மா தூக்கி கொண்டு நடந்தாலே குழந்தை அழுகுவதை நிறுத்திவிடும். சில குழந்தைகள் தோலில் போட்டு தட்டி கொடுத்தால் அழுகாது. இன்னும் சில குழந்தைகள் மடியில் வைத்து காலை ஆட்டினால் சமாதானம் ஆகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி செய்தால் அழுகையை நிறுத்தும். உங்களின் குழந்தை எதை செய்தால் அழுகையை நிறுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.குழந்தை ஏன் அழுகிறது.?
குழந்தை அழுகுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் ஒன்று பசிக்கும்போதெல்லாம் குழந்தை அழுகும்.
அடுத்து கழிவுகளை கழித்தாலோ அல்லது கழுவு நீர் வர மாதிரி இருந்தாலும் குழந்தைகள் அழுகும்.
குழந்தைக்கு எதும் உடம்பில் வலிகள் இருந்தாலும் குழந்தைகள் அழுகும். உதாரணமாக வயிற்று வலி இருந்தால் குழந்தை அழுகும். அப்போது குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று அதற்கான சிகிச்சைகளை பெறுவது நல்லது.
குழந்தை எவ்வளவு தான் அழுதாலும் குழந்தையின் தலையை பிடித்து கொண்டு குலுக்க கூடாது. இப்படி குலுக்கினால் அவர்களுக்கு மூளையில் பிரச்சனை ஏற்படும்.
குழந்தை அழுதால் நீங்கள் சமாதானப்படுத்தும் போது சமாதானம் ஆகிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே நீங்கள் சமாதானப்படுத்தும் போது சமாதானம் ஆகாமல் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தால் அவர்களுக்கு உடம்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவரை அணுகி பிரச்சனைக்கான சிகிச்சைகள் பெறுவது அவசியமானதாகும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |