குழந்தை தவழ என்ன செய்ய வேண்டும்? How to crawl my baby easy tips in Tamil..!

Advertisement

குழந்தை தவழ என்ன செய்ய வேண்டும்? How to teach baby to crawl..!

How to teach baby to crawl:- வணக்கம் தாய்மார்களே இன்று நாம் குழந்தை தவழ என்ன செய்ய வேண்டும்..? என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். குழந்தையின் பிறப்பில் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும். குழந்தை தவழும் பழக்கமானது குழந்தைக்கு தானாக வரும் பழக்கமே தவிர எவராலும் வரவைப்பது இல்லை. அதாவது தங்கள் குழந்தை சுகந்திரமாக உலாவ தொடங்கும் காலங்களைத்தான் குழந்தை தவழ்ந்து செல்தல் என்று சொல்வார்கள்.

பொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் தவழும் காலங்களில் மிகவும் துறுதுறு என இருப்பார்கள்.

தாய்ப்பால் கட்டி கொண்டால் என்ன செய்வது..!

 

அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.

எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.

சரி இந்த பதிவில் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் (How to teach baby to crawl) போது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி இந்த  பதிவில் பட்டியலிட்டுளோம் அவற்றையெல்லாம் பின்பற்றினால், குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

கோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..!

 

டிப்ஸ்: 1

குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும்.

அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.

டிப்ஸ்: 2

பெற்றோர்களாகிய தங்கள் குழந்தைகளை எப்பொழுதுமே தூக்கிவைத்து கொண்டு விளையாட்டு காட்டாதீர்கள். சிறிது நேரம் தரையில் அமரவைத்து விளையாட்டு காட்டுங்கள். இல்லையென்றால் படுக்கவைத்தாவது விளையாட்டு காட்டுங்கள்.

இவ்வாறு செய்வதினால் குழந்தைகளுக்கு பிடித்தமான பொருட்களை அவர்களுக்கு எதிரே வைப்பதினால் குழந்தைகள் அந்த பொருளை எடுக்க முயற்சி செய்வார்கள். இதனால் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தவழ ஆரம்பிப்பார்கள்.

டிப்ஸ்: 3

குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்துக சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள்.

எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.

டிப்ஸ்: 4

குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.

அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.

டிப்ஸ்: 5

உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள்.

இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement