குழந்தைக்கு நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவு..! Immune Boosting Foods For Babies..!
Immunity Food For Babies: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் உங்கள் செல்ல குழந்தைகளின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க செய்யும் ஒரு அருமையான உணவு ரெசிபி தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். குழந்தைகளின் வளர்ச்சியை பாதுகாப்பதில் அனைத்து தாய்மார்களுக்கும் ஒரு தனி கவனம் இருக்கும். தாய்மார்களின் கவனம் சரியாக இருந்தாலும் சில குழந்தைகள் உணவில் அக்கறை செலுத்த மாட்டார்கள். அந்த வகையில் 6 மாதம் முதல் 1 வருடம் வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய அளவிற்கு சுவையுள்ள ஒரு உணவு வகையை எப்படி தயார் செய்யலாம் என்று இப்போது படித்தறியலாம்..!
உங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை..! Porridge for Babies ..! |
தேவையான பொருள்:
- ஆப்பிள் 1 – (துண்டாக நறுக்கியது)
- கேரட் 1 – (துண்டாக நறுக்கியது)
- தண்ணீர் – சிறிதளவு
- ஆரஞ்ச் ஜூஸ் – 4 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/8 டீஸ்பூன்
ஸ்டேப் 1:
முதலில் 1 ஆப்பிளை எடுத்து மேல் உள்ள தோல் பகுதிகளை சீவி அதன் உள் விதைகளை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 2:
அடுத்து கேரட் ஒன்றை எடுத்து தோல்களை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நறுக்கிய கேரட் மற்றும் விதை நீக்கி நறுக்கி வைத்துள்ள ஆப்பிளை தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
ஸ்டேப் 3:
கடாயில் தேவையான அளவிற்கு தண்ணீர் வைத்து அதன் மேல் நறுக்கி வைத்துள்ள கேரட்,ஆப்பிள் பாத்திரத்தை வைத்து 15 நிமிடம் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
உங்கள் செல்ல குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்..! |
ஸ்டேப் 4:
15 நிமிடம் வரை நன்றாக வெந்த பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போது இவற்றை தனியாக சிறிது நேரம் வைக்கவேண்டும்.
ஸ்டேப் 5:
அடுத்து மிக்ஸி ஜாரில் வேக வைத்த ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்துக்கொள்ளவும். ஆப்பிள், கேரட்டுடன் நறுக்கிய இஞ்சி 1/2 ஸ்பூன் அளவு சேர்க்கவும்.
ஸ்டேப் 6:
இஞ்சி சேர்த்தவுடன் மிக்ஸி ஜாரில் மஞ்சள் தூள் 1/8 டீஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். இதனுடன் ஆரஞ்ச் ஜுஸ் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். ஜாரில் தேவையான அனைத்து பொருள்களையும் சேர்த்த பிறகு நன்றாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான உணவானது ரெடி. இதனை 6 மாத முதல் 12 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து பழகலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.
தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு சத்தான உணவான இதனை தினமும் கொடுத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby Health Tips |