Immunity Boosting Drink for Child in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் அனைத்து தாய்மார்களுக்கும் உள்ள மிக பெரிய பிரச்சனை என்றால் தனது குழந்தை ஒழுங்காக சாப்பிட மறுப்பது மற்றும் அவர்களுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இவை இரண்டும் தான். நான் நன்றாகத்தான் சமைத்து தருகிறேன் ஆனால் அவர்கள் சரியாக சாப்பிட மறுக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்று கவலைப்படும் அனைத்து தாய்மார்களுக்காகத்தான் இந்த பதிவு. இந்த பதிவில் குழந்தைகளின் பசியை தூண்டுவதற்கும் மற்றும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
Homemade Drinks to Boost Immune System in Tamil:
இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறைகள் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதில்லை. அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மாதிரியான பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.
முதலில் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- மிளகு – 10
- ஓமம் – 1/2 டீஸ்பூன்
- பூண்டு – 2
- இஞ்சு – 1 சிறிய துண்டு
மேலேகூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் உரலில் போட்டு நன்கு பொடியாக இடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் நாம் இடித்துவைத்துள்ள பொடியை சேர்த்து அது 1/2 டம்ளர் அளவிற்கு வரும் வரை கொதிக்கவிடுங்கள்.
இது நன்கு கொதித்த பிறகு அதனை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இந்த மருந்தினை குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். இதனை தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு அளித்துவருவதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் பசியை தூண்டும்.
குழந்தையின் சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |