குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்படி செய்யுங்க..!

Advertisement

Kids For During Winter Season Tips in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி பார்த்து கொள்வது என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் இருப்பார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவு.

குளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது..!

குழந்தைகளுக்கு சளிபிடிக்காமல் இருக்க டிப்ஸ்:

Kids For During Winter Season in Tamil

குளிர்காலம் வந்தாலே குழந்தைகளுக்கு சளி பிடித்துவிடும். அப்போது குழந்தைகளால் மூச்சு கூட விட முடியாது. அந்த குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் கொடுக்க கூடாத உணவுகள் என்ன என்று பார்க்கலாம்.

கொடுக்க வேண்டிய உணவுகள்:

கொடுக்க வேண்டிய உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வைட்டமின் C, வைட்டமின் E, இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் அடங்கிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தூதுவளை, கற்பூரவல்லி, கொள்ளு சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை கண்டிப்பாகக் சமைத்து கொடுக்க வேண்டும். இவற்றில் இருக்கும் சத்துக்கள் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் தடுக்கிறது.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் எப்பொழுதும் சூடாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் பேரிச்சைப்பழம் கொடுக்கலாம். அதுபோல அடிக்கடி உணவில் பீட்ரூட் சேர்த்து சமைத்து கொடுக்கலாம். அதுபோல தூதுவளையில் ரசம், தோசை போன்ற உணவுகளை சமைத்து கொடுக்கலாம்.

மேலும் குழந்தைகளுக்கு குளிர்காலத்தில் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேகவைத்து பச்சையாக கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு அதிக சத்துக்கள் கிடைக்கும்.

குழந்தைக்கு சளி பிரச்சனை வராமல் பாதுகாக்க..! இதை TRY பண்ணுங்க

கொடுக்க கூடாத உணவுகள்:

கொடுக்க கூடாத உணவுகள்

குளிர்காலத்தில் ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இதனால் தான் குழந்தைகளுக்கு சளி பிடிக்கிறது. ஃபிரிட்ஜில் வைத்த தண்ணீர், ஜூஸ், சாக்லேட் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

பழங்களை ஜூஸாக அடித்து கொடுக்காதீர்கள். பழங்களை பச்சையாக கடித்து சாப்பிட சொல்லுங்கள். மேலும், குளிர்காலத்தில் திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பலன்களை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

குழந்தைகளுக்கு தயிர், பால் போன்றவற்றை இரவு நேரத்தில் கொடுக்க கூடாது. இரவில் பால் குடிக்க கொடுப்பதால் சளி பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

மேலும், அவர்களுக்கு நீங்கள் பால் குடிக்க கொடுத்தால் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொடுங்கள். இதனால் நெஞ்சில் இருக்கும் சளி குறைய தொடங்கும்.

குளிர்காலத்தில் புடலங்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய் மற்றும் சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள்.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement