குழந்தைக்கு நெஞ்சு சளி இருமல் குணமாக
வணக்கம் நண்பர்களே இன்று நம் குழந்தை நலன் பதிவில் பச்சிளம் குழந்தைகளுக்கு நெஞ்சு சளியை விரட்ட கஷாயம் இல்லாமல் குழந்தைகளின் நெஞ்சு சளியை போக்குவதற்கு அருமையான டிப்ஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே குழந்தைகளுக்கு நெஞ்சு சளியினால் ஏற்படும் வறட்டு இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் கஷாயம், மாத்திரை என்று தருவார்கள். சில குழந்தைகள் கஷாயத்தை குடிப்பதற்கு அடம் பிடிக்கும்.
இதுபோன்ற சளி பிரச்சனைகளில் இருந்து அவதிப்படும் குழந்தைகளுக்கு கஷாயமும் இல்லாமல், மாத்திரையும் இல்லாமல் நெஞ்சு சளியை விரட்டி விடலாம். மேலும் அவற்றை எப்படி செய்து உபயோகிக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.
குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்..! |
நெஞ்சு சளி இருமல் குணமாக:
டிப்ஸ்:1
முதலில் ஓமவல்லி இலைகளை நான்கு அல்லது ஆறு இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன குழந்தையாக இருந்தால் நான்கு ஓமவல்லி இலைகள் போதும். கொஞ்சம் பெரிய குழந்தையாக இருந்தால் ஆறு இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஓமவல்லி இலை இல்லை என்றால் வெற்றிலை எடுத்துக்கொள்ளலாம். அந்த ஓமவல்லி இலையில் விக்ஸ் (Vicks) எடுத்துக்கொண்டு அந்த இலை முழுவதும் நன்றாக தடவ வேண்டும். அந்த இலையில் ஒரு பக்கம் மட்டும் தடவி கொண்டு, ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு, அந்த விளக்கில் காட்ட வேண்டும்.
விக்ஸ் தடவி இருக்கும் இடத்தை நெருப்பில் காட்டக் கூடாது. விக்ஸ் தடவாமல் இருக்கும் மறுபக்கத்தை மட்டும் தான் நெருப்பில் காட்ட வேண்டும். அதை விளக்கில் காட்டிய இலைகளை குழந்தைகளுக்கு நெஞ்சில் வைக்கும் பொழுது வெதுவெதுப்பான சூட்டுடன் வைக்கவேண்டும்.
இந்த இலையை இப்படி செய்து குழந்தைகளுக்கு நெஞ்சு அல்லது முதுகு பகுதி முழுவதும் உறங்கும் பொழுது அரைமணி நேரம் இப்படி வைத்து அந்த இலையை எடுத்த பிறகு அந்த இலையின் நிறம் மாறி சளியை எடுத்து விடும்.
குழந்தைகளுக்கு நெஞ்சு சளி நீங்க:
டிப்ஸ்:2
அடுத்ததாக நெஞ்சு சளியை சரி செய்வதற்கு, ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்த பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் அந்த பாத்திரத்தை வைக்கவேண்டும்.
இந்த தேங்காய் எண்ணெயில் இருந்து கொஞ்சம் புகை வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டின் மேல் வைக்கவேண்டும். அதன் பிறகு அதில் கட்டி கற்பூரத்தை நுனிக்கி அதை நன்றாக கலந்து விட்டு அதை குழந்தையின் நெஞ்சு பகுதி, தொண்டை, நெற்றி, முதுகு போன்ற பகுதியில் தடவி தூங்க வைப்பதால் சளி எல்லாம் கரைந்து எளிதில் குணமாகிவிடும்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |