வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்கவேண்டும் தெரியுமா..?

Updated On: April 13, 2026 5:37 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

What kind of Food Should be given to Children in Summer in Tamil

கோடை காலம் என்றாலே நாம் அனைவருக்குமே நினைவிற்கு வருவது அதன் வெப்பம் தான். இந்த வெப்பம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்த வெப்பத்தை தாங்கி கொள்வது என்பது பெரியவர்களாலே இயலாத காரியம். இந்நிலையில் சிறிய குழந்தைகளால் எவ்வாறு இதனை தாங்கி கொள்ள முடியும். மேலும் அவர்கள் விளையாடி கொண்டிருப்பதால் அவர்களின் உடலில் உள்ள அனைத்து நீர்ச்சத்தும் குறைந்து மிகவும் சோர்வடைந்துவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு இந்த கோடை காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை அளித்தால் அவர்களின் நீர்ச்சத்தினை சரியான அளவில் வைத்திருக்க முடியும் என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:

1. தர்பூசணி:

Food for summer child in tamil

கோடை காலத்தில் மிகவும் அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை குழந்தைகள் எடுத்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த தர்பூசணி சரியான ஒன்று ஆகும். ஆம் இதில் 92% நீர்ச்சத்துள்ளது. அதனால் இதனை குழந்தைகளுக்கு தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட கொடுக்கலாம்.

இதனை நீங்கள் அப்படியேயும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படியில்லை  என்றால் இதனை ஜுஸாகவும் தயாரித்து கொடுக்கலாம்

2. தக்காளி:

What food should be given to child in summer season in tamil

தக்காளியிலும் அதிக அளவு நீர்ச்சத்துள்ளது. அதனால் இதனையும் தினமும் குழந்தைகளுக்கு உணவு தயாரித்து கொடுக்க வேண்டும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதனை தினமும் குழந்தைகள் சாப்பிடுவதால் குழந்தைகளின் சருமம் வெயிலில் இருந்து பாதுக்காக்கப்படுகிறது.

3. வெள்ளரிக்காய்:

Best food for child in summer season in tamil

பொதுவாக வெள்ளரிக்காய் உடலை குளிர்விக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு இதனை தினமும் கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலை குளிரவைக்க முடியும்.

மேலும் கோடை காலத்தில் அவர்களுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆகிவற்றையும் இது அதிக அளவு அளிக்கின்றது. அதனால் கோடை காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு இதனை தினமும் தர வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> குழந்தைகளின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

4. தயிர்:

Food for summer child

தயிரும் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களையும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆகியவற்றை அளிக்கின்றன. மேலும் இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை அளிக்கின்றது. அதனால் கோடை காலத்தில் உங்களின் குழந்தையின் உணவில் தினமும் தயிரினை மறக்காமல் எடுத்து கொள்ள வையுங்கள்.

5. சின்ன வெங்காயம்:

What food should be given to child in summer season

சின்ன வெங்காயத்தில் மிக அற்புதமான குளிர்ச்சி தன்மை உள்ளது. அதிலும் குறிப்பாக இதனை வேக வைக்காமல் சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை அளிக்கும். ஆனால் குழந்தைகள்  இதனை பச்சையாக சாப்பிட மறுப்பார்கள் அதனால் இதனை புதினாவுடன் சேர்த்து சட்னியாக சாப்பிட கொடுக்கவும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now