இட்லி உப்புமா செய்வது எப்படி? | Idli Upma Seivathu Eppadi
காலை உணவாக இருந்தாலும் சரி, நைட் டின்னராக இருந்தாலும் சரி பெரும்பாலான வீட்டில் இட்லி, தோசை தான். தோசையை விரும்பி சாப்பிடும் அளவிற்கு யாரும் இட்லியை விரும்பி சாப்பிடுவதில்லை. சிலர் வீட்டில் இட்லி நிறைய மீந்து போய்விடும். அதனை அப்படியே வீணாக்கிவிடுவார்கள். இனி மீந்து போன இட்லியை தூக்கி போடாதீங்க. மீந்து போன இட்லியை வைத்து சூப்பராக இட்லி உப்புமா செய்யலாம்ங்க.. இட்லி பிடிக்காதவர்கள் கூட இந்த இட்லி உப்புமாவினை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க அதை எப்படி செய்யலாம்னு பார்ப்போம்..
மீந்து போன 2 இட்லியில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி |
இட்லி உப்புமா செய்ய – தேவையான பொருள்:
- மீந்து போன இட்லி – 3 (உங்களிடம் எத்தனை உள்ளதோ எடுத்துக்கொள்ளலாம்)
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
- கருவேப்பிலை கொத்து – 2 கிள்ளியது
- உளுந்து – 1 டீஸ்பூன்
- பூண்டு – 1 (தோல் நீக்கியது)
- கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 1 நறுக்கியது
- உப்பு – சிறிதளவு
இட்லி உப்புமா செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
முதலில் மீந்து போன இட்லியை உதிரி உதிரியாக பிச்சி போட்டுக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
அடுத்து அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து கடுகு நன்றாக பொரிய வேண்டும்.
ஸ்டேப்: 3
அடுத்து நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாவினை சேர்த்து வதக்கிவிடவும். இதனுடன் நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 4
நன்றாக வதக்கிய பிறகு 1 டீஸ்பூன் உளுந்து, மற்றும் தோல் நீக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 5
உளுந்து கொஞ்சம் நிறம் மாறியதும் கடலை பருப்பினை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து ஒருமுறை வதக்கிவிடவும்.
ஸ்டேப்: 6
அடுத்ததாக நன்றாக வதக்கியதும் உதிரியாக செய்து வைத்துள்ள இட்லியை இதில் உப்பு சேர்த்து வதக்கிவிடவும். 3-4 நிமிடம் வரை இட்லியை கடாயில் வைத்து வதக்கவும். அவ்ளோதாங்க சுவையான இட்லி உப்புமா ரெடியாகிட்டு..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |