Koyya Satni Recipe in Tamil
பொதுநலம்.காம் பதிவின் அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் கொய்யாகாயை கொண்டு சட்னி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். காலையில் இட்லி, தோசை என்று விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ இட்லி தோசைக்கு இந்த மாதிரி சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். கொய்யா பழத்தின் நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த கொய்யாக்காயை கொண்டு சட்னி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
2 நிமிடத்தில் தேங்காயில் பூண்டு சேர்த்து இதுபோல் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள்..! |
கொய்யா காய் சட்னி செய்வது எப்படி..?
கொய்யா சட்னி – தேவையான பொருட்கள்:
- கொய்யா காய் – 3
- நறுக்கிய கொத்தமல்லி – 1 கப்
- பூண்டு பற்கள் – 6
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- புளி – சிறிதளவு
- பெருங்காய தூள் – 1 ஸ்பூன்
- இஞ்சி – அரை துண்டு
- உப்பு – தேவையான அளவு
கொய்யா காய் சட்னி செய்முறை:
செய்முறை -1
முதலில் கொய்யா காயை நறுக்கி அதன் உள்ளே இருக்கும் விதைகளை வெளியே எடுக்க வேண்டும்.
பின் விதை நீக்கிய கொய்யாகாயை மிதமான சூட்டில் லேசாக வறுக்க வேண்டும்.
செய்முறை -2
பின் வறுக்கப்பட்ட கொய்யா காயை மிக்சியில் போட்டு அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, சீரகம், புளி, இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை -3
பின் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பில்லை அதனுடன் பெருங்காய தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் நாம் அரைத்து வைத்துள்ள கொய்யா சட்னியை இதில் சேர்க்க வேண்டும்.
அவ்வளவு தான் இப்போது இட்லி தோசைக்கு சூப்பரான கொய்யா காய் சட்னி தயார்..!
தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |