சிக்கன் மசாலா தூள் & சிக்கன் மசாலா செய்முறை
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கனில் செய்த அனைத்து ரெசிபிசும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் அசைவ வகை குழம்பு வைத்தால் மட்டும் தெருவே மணக்கும், ருசியும் அப்படி இருக்கும். அதற்கு அவர்கள் கை பக்குவம் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அப்படி சுவையில் உங்கள் சிக்கன் குழம்பை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு அதில் சேர்க்க கூடிய சிக்கன் மசாலா பொடியை எப்படி தயாரிப்பது மற்றும் சிக்கன் மசாலா ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக படித்தறியலாம் வாங்க.
சிக்கன் மசாலாபொடி செய்ய தேவையான பொருட்கள்:
- மல்லி விதை – மூன்று டேபிள் ஸ்பூன்
- சீரகம் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 8
- வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – ஒரு கையளவு
சிக்கன் மசாலா தூள் செய்முறை விளக்கம் – Chicken Masala Powter Recipe:
ஸ்டேப்: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து மேல் கூறப்பட்டுள்ள மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து மொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 2
பின் அதே கடாயில் ஒரு கையளவு கருவேப்பிலையை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சிக்கன் மாசால் தூள் தயார். அடுத்ததாக இந்த சிக்கன் மசாலா தூளை பயன்படுத்தி சிக்கன் மசாலா ரெசிபி செய்வது எப்படி எனபதை பற்றி பார்க்கலாம் வாங்க.
சிக்கன் மசாலா ரெசிபி – Chicken Masala Recipe Tamil:
- எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – இரண்டு (பொடிதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – இரண்டு (நீளவாக்கில் கீறியது)
- இஞ்சி பூண்டு விழுது – இரண்டு ஸ்பூன்
- பெரிய தக்காளி – இரண்டு (பொடிதாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
- அரைத்த சிக்கன் மசாலா தூள் – மூன்று ஸ்பூன்
- சிக்கன் – ஒரு கிலோ
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – இரண்டு கப்
சிக்கன் மசாலா செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நமக்கு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு பொடிதாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
தக்காளி நன்கு வதங்கியதும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், அரைத்த சிக்கன் மசாலா தூள் மூன்று ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஸ்டேப்: 4
பின்பு ஒரு கிலோ சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். சிக்கனை சேர்த்து நன்கு வதங்கியதும் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி விடுங்கள். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
ஸ்டேப்: 5
20 நிமிடம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி அனைவருக்கும் பரிமாறுங்கள் அவ்வளவு தான் சுவையான சிக்கன் மசாலா ரெசிபி தயார் ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |