புடலங்காய் கூட்டு எப்படி செய்வது? | Pudalangai Kootu Recipe in Tamil
தமிழகத்தில் பாரம்பரியமான பொரியல் கூட்டு வகைகளில் ஒன்றுதான் இந்த புடலங்காய் கூட்டு. வீட்டில் நடக்கக்கூடிய விருந்துகளில் பெரும்பாலும், ஹோட்டல் உணவு சைடிஷ்களில் புடலங்காய் கூட்டிற்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் சத்து அதிகமாக இருக்கும் காரணத்தால் புடலங்காய் நமது உடலிற்கு மிகவும் நல்லது. புடலங்காய் கூட்டானது கார குழம்பு, சாம்பார், ரசம், வத்த குழம்பு போன்ற அனைத்து குழம்பிற்கும் ஏற்ற சைடிஷ்ங்க. இந்த பதிவில் சுவையான சைடிஷ் புடலங்காய் கூட்டு எப்படி செய்யலாம்னு கீழே பதிவிட்டுள்ளோம். படித்துவிட்டு ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.. இனிமேல் எல்லா குழம்பிற்கும் புடலங்காய் கூட்டு பண்ணிரலாம் என்று டிசைட் பண்ணுவீங்க.. வாங்க புடலங்காய் கூட்டு எப்படி செய்யலாம்னு தெரிஞ்சிக்கலாம்..
பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு எப்படி செய்வது |
புடலங்காய் கூட்டு – தேவையான பொருள்:
- புடலங்காய் – 2
- கடலை பருப்பு – 1 மேஜைக்கரண்டி
- துருவிய தேங்காய் – 3-4 மேஜைக்கரண்டி
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- பாசி பருப்பு – 1/4 கப்
- சின்ன வெங்காயம் – 2 பொடிதாக நறுக்கியது
- பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சீரக தூள் – ½ மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 தேக்கரண்டி
- பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் – தாளிப்பதற்கு
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – 1 கொத்து
புடலங்காய் கூட்டு செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
புடலங்காய் கூட்டு செய்வதற்கு முதலில் வெங்காயம், புடலங்காய், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு தேங்காயை துருவி கொள்ளவும். பின் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்றாக சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 30-லிருந்து 45 நிமிடம் வரை ஊற வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
நன்றாக ஊறிய பிறகு அடுப்பில் ஒரு குக்கரை மிதமான சூட்டில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து போடவும்.
ஸ்டேப்: 3
பிறகு அதில் கடலை பருப்பு நன்றாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் ஊற்றிய பிறகு அவற்றில் மஞ்சள் தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக விடவும். (புடலங்காயை கடைசியாகத்தான் சேர்க்க வேண்டும், அப்பொழுது தான் அது குழையாமல் இருக்கும்.)
ஸ்டேப்: 4
2 விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 5
இப்போது 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அணைத்து விட்டு மூடி வைத்திருக்கும் மூடியை திறந்து அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 6
அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை மிதமான சூட்டில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் புடலங்காயை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.
முருங்கை கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி |
ஸ்டேப்: 7
நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பில் வைத்திருக்கவும். இப்பொழுது அடுப்பில் ஒரு pan ஐ மிதமான flame-ல் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை ஹீட் செய்யவும்.
ஸ்டேப்: 8
கடாயில் ஊற்றிய எண்ணெய் நன்றாக ஹீட் ஆனதும் அதில் சிறிதளவு கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
ஸ்டேப்: 9
உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் புடலங்காய் கூட்டில் சேர்த்து அதை நன்றாக கலக்கவும். அட்டகாசமான புடலங்காய் கூட்டு தயார்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |