கல்யாண ரசம் வைப்பது எப்படி? | Kalyana Rasam Recipe in Tamil

Advertisement

ரசம் வைப்பது எப்படி? | Rasam Recipe in Tamil

சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள். ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம். ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் எப்படி பக்குவமாக, ருசியாக ரசம் வைக்கலாம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

ரசம் வைக்க தேவையான பொருட்கள்:

ரசம் வைப்பது எப்படி

  1. மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
  2. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  3. நல்லெண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் – 4
  5. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  6. கருவேப்பிலை – 1 கொத்து
  7. தக்காளி – 2 (நறுக்கியது)
  8. மஞ்சள் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
  9. புளிச்சாறு – 100 ml (உங்களுக்கு தேவையான அளவு புளிச்சாறு எடுத்து கொள்ளலாம்)
  10. உப்பு – தேவையான அளவு
  11. கொத்தமல்லி – தேவையான அளவு
  12. பருப்பு தண்ணீர் – தேவையான அளவு (விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பருப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை:

Kalyana Rasam Recipe in Tamil

ஸ்டேப்: 1

  • Rasam Recipe in Tamil: முதலில் ஒரு குக்கரில் 100 கிராம் பருப்பு எடுத்து அதனை கழுவி ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • Kalyana Rasam Recipe in Tamil: பின் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து மீடியம் Flame-ல் வைத்து வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் அதே கடாயில் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து அதையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பின் வறுத்த மிளகு மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

  • Paruppu Rasam Recipe in Tamil: பின் ஒரு கடாயில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் 4 சிவப்பு மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிக்கவும். அதில் 1 கொத்து கருவேப்பிலை, நறுக்கிய தக்காளி 2 சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 4

  • தக்காளி வதங்கும்போது கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின்னர் அதில் 100 ml புளிச்சாறு சேர்க்கவும். புளிசாரில் உள்ள பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும் (மீடியம் Flame-ல் வைத்து 6-5 நிமிடம் வரை கொதிக்க விடவும்)

ஸ்டேப்: 5

  • Milagu Rasam Recipe in Tamil: 6-7 நிமிடம் கழித்து வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பு தண்ணீரை அதில்  சேர்க்கவும் (பருப்பு தண்ணீர் சேர்க்காமலும் இந்த ரசத்தை வைக்கலாம்)

ஸ்டேப்: 6

  • ரசம் வைப்பது எப்படி? பருப்பு தண்ணீர் கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு, அரை டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள், அரைத்து வைத்த மிளகு, சீரக பொடி ஒன்றரை டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி தேவையான அளவு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான ரசம் தயார்.
தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement