மிகவும் ருசியான கடல்பாசி புட்டிங் செய்வது எப்படி..? | Agar Agar Pudding Recipe in tamil

Agar Agar Pudding Recipe in tamil

Agar Agar recipe in Tamil | கடல்பாசி புட்டிங் செய்வது எப்படி..?

ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் கடல்பாசி புட்டிங் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருகின்றோம். பொதுவாக கடல்பாசியை இதுவரை ஐஸ்கிரீம் மற்றும் பலவகையான ஜூஸ்களில் ஜெல்லி போன்ற பொருளாக மட்டும்தான் பயன்படுத்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கடல்பாசியை வைத்து புட்டிங் செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

இதையும் படியுங்கள்=> உங்கள் வீட்டில் காபித்தூள் உள்ளதா.! அப்பொழுது இந்த மாதிரி புட்டிங் செய்து சாப்பிடுங்கள்..!

Agar Agar Pudding Recipe in tamil:

முதலில் நமது கடல்பாசி புட்டிங்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கடல்பாசி  – 2 பாக்கெட்
  2. பால் – 1/2 லிட்டர் 
  3. ஜவ்வரிசி – 100 கிராம்  
  4. சர்க்கரை – 2 கப் 
  5. ரோஸ் நிற ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன் 
  6. பாதாம் -10
  7. பிஸ்தா – 10

செய்முறை:

Agar Agar recipe in Tamil

 

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி 1/2 மணிநேரம் நன்கு ஊறவிடுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 லிட்டர் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஸ்டேப் – 2

பால் நன்கு கொதித்த பிறகு அதில் நாம் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். இவையெல்லாம் நன்கு கொதித்த பிறகு அதில் 2 கப் சர்க்கரை மற்றும் 1/4 டீஸ்பூன் ரோஸ் நிற ஃபுட் கலரை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஸ்டேப் – 3

Agar agar dessert recipe in tamil

இவையெல்லாம் நன்கு கொதித்த பிறகு 2 பாக்கெட் கடல்பாசியை சேர்த்து  நன்கு கொதிக்கவிடுங்கள். கடல்பாசி நன்கு கரைந்த பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி கிண்ணத்தில் ஊற்றி அதன் மீது நாம் எடுத்துவைத்துள்ள 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா சிறிது சிறிதாக உடைத்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் இதனை குளிர்சாதனப்பெட்டியில் 10 நிமிடம் வைத்து பிறகு அதனை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அனைவருக்கும் பரிமாறலாம்.

இப்பொழுது நமது கடல்பாசி புட்டிங் ரெடி வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த கடல்பாசி புட்டிங்கை செய்து சுவைத்து பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal