ரமலான் ஸ்பெஷல் அகர் அகர் ரெசிபி..! Agar Agar Recipe..!

Agar Agar Recipe Ideas

சுவையான கடல் பாசி ரெசிபி செய்வது எப்படி..! Agar Agar Recipe In Tamil..!

கடல் பாசி செய்முறை: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ரமலான் பண்டிகை ஸ்பெஷல் சுவையான கடல் பாசி ரெசிபி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த கடல் பாசி ரெசிபியை வீட்டில் அனைவரும் செய்து சாப்பிடலாம். ரொம்பவே இந்த கடல் பாசி ரெசிபி(Agar Agar Recipe) சுவையாக இருக்கும். அனைவருக்கும் பிடித்த ரெசிப்பினு கூட இதை சொல்லலாம். சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..!

new10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..!

கடல் பாசி ரெசிபி செய்முறை:

கடல் பாசி செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 1 கப் 
  2. பிரட் – 4 துண்டுகள் 
  3. பால் – 3 கப் 
  4. சர்க்கரை – 1/2 கப் 
  5. கடல் பாசி – 7 கிராம் 
  6. கோக்கோ பவுடர் – 1/2 டீஸ்பூன் 

Step 1:

முதலில் கடல்பாசியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். இந்த கடல்பாசி அனைத்து கடைகளிலும் விற்கும்.

அடுத்து இந்த கடல்பாசியை 1 கப் அளவு தண்ணீர் வைத்து 20 நிமிடம் நன்றாக ஊறவைத்து கொள்ளவேண்டும்.

Step 2:

அடுத்து மிக்ஸி ஜாரில் பிரட் நான்கை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து ஜாரில் போடவும்.

பிறகு சர்க்கரை 1/2 கப் இதனுடன் சேர்க்கவேண்டும். அடுத்து சர்க்கரையுடன் காய்ச்சிய 3 கப் பால் சேர்க்கவேண்டும்.

Step 3:

இப்போது மிக்ஸியில் சேர்த்த பிறகு நன்றாக அரைத்து கொள்ளவும். இதை தனியாக வைத்து கொள்ளவும்.

அடுத்து ஊறவைத்த கடல்பாசியை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

நன்றாக காய்ச்சிய பிறகு மிக்ஸியில் அரைத்த கலவையை அடுப்பில் உள்ள கடல்பாசியுடன் சேர்க்க வேண்டும்.

newக்ரிஸ்பி கார்ன் செய்முறை..! Crispy Corn Recipe In Tamil..!

Step 4:

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும். நன்றாக கரைந்த பிறகு தனியாக இரண்டு பவுலில் இதை ஊற்றிக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பவுலில் 1/2 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர், 2 டேபிள் ஸ்பூன் அளவு பால் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

அடுத்து இரண்டு பவுலில் ஊற்றி வைத்திருப்பதில் ஒரு பவுலில் இந்த கோக்கோ பவுடர் கலவையை சேர்க்க வேண்டும்.

Step 5:

அந்த ஒரு பவுலில் ஊற்றி கோக்கோ பவுடர் கலவையை நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இப்போது தனியாக பவுலில் ஒரு கரண்டி அளவு வெள்ளை கலவையும், ஒரு கரண்டி அளவு ப்ரவுன் நிற கலவையும் இதுபோன்று லேயர் லேயராக வரும் வரை மெதுவாக ஊற்ற வேண்டும்.

Step 6:

எல்லாவற்றையும் லேயராக ஊற்றிய பிறகு இதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்க வேண்டும்.

30 நிமிடம் கழித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இதை சாப்பிடலாம். அவ்ளோதாங்க கடல் பாசி (agar agar in tamil) ரெடி.

இதை சாப்பிடவே ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். இந்த டிப்ஸை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal