அமெரிக்கன் ஸ்டைல் Chop Suey வீட்டிலேயே செய்ய தெரியுமா..?

Advertisement

Chop Suey Recipe in Tamil

சமையல் என்று சொன்னாலே அதில் நிறைய வகையான ரெசிபிகள் இருக்கின்றன. சிலர் எப்போதும் ஒரு மாதிரியான ரெசிபிகள் சாப்பிட்டு அலுத்துபோகிறிக்கிறது என்று சொல்லுவார்கள். எனவே இன்றைய பதிவானது சமைக்கும் தாய்மார்களுக்கும் சமையல் பிரியர்களுக்கு ஒரு புது விதமான பதிவாக இருக்கும். சரி வாருங்கள் அப்படி என்ன ரெசிபி என்று தெரிந்துக்கொள்ள பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்வோம்.

அமெரிக்கன் ஸ்டைல் சாப் சுயி செய்ய தேவையான பொருட்கள்:

  1. நூடுல்ஸ்- 150 கிராம்
  2. சோளமாவு- 2 ஸ்பூன்
  3. மிளகு- 1 ஸ்பூன்
  4. பூண்டு- 3 பல்
  5. இஞ்சி- சிறிய துண்டு
  6. வெங்காயம்- 1
  7. கேரட்- 1
  8. முட்டை கோஸ்- 1/ 2 கப்
  9. பச்சை மிளகாய்- 3
  10. மிளகாய் சாஸ்- 2 ஸ்பூன்
  11. தக்காளி சாஸ்- 2 ஸ்பூன்
  12. சோயா சாஸ்- 1 ஸ்பூன்
  13. முட்டை- 1
  14. எண்ணெய்- 200 கிராம்
  15. உப்பு- தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சாப் சுயி செய்முறை விளக்கம்:

சாப் சுயி செய்முறை விளக்கம்

ஸ்டேப்- 1

நூடுல்ஸ்

முதலில் நீங்கள் அடுப்பை பற்ற வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 150 கிராம் நூடுல்ஸை 5 நிமிடம் குலையாமல் வேகவைத்து விடுங்கள். நூடுல்ஸ் வெந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி நூடுல்ஸை தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

சாப் சுயி

அடுத்ததாக வேகவைத்துள்ள நூடுல்ஸ்சுடன் 1 ஸ்பூன் எண்ணெய், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு மற்றும் 1 ஸ்பூன் சோள மாவு இந்த அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

chop suey in tamil

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள நூடுல்ஸை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்து தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்து நாம் சாஸ் தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் கேரட், பச்சை மிளகாய் , வெங்காயம், பூண்டு மற்றும் முட்டை கோஸ் இந்த அனைத்து காய்களையும் நீளமாக மற்றும் சிறிது மெலிசாக நறுக்கி கொள்ளுங்கள். 

ஸ்டேப்- 5 

chop suey noodles in tamil

பிறகு நீங்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் சோளமாவுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள்.

ஸ்டேப்- 6

vegetable chop suey recipe in tamil

எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, இஞ்சி மற்றும் நறுக்கிய வெங்காயம் இவை  அனைத்தையும் போட்டு சிறிது நேரம் வதக்கி கொண்டு அதன் பிறகு நறுக்கிய கேரட், முட்டை கோஸ் மற்றும் பச்சை மிளகாயை அதில் போட்டு நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். 

ஸ்டேப்- 7

10 நிமிடம் கழித்து பிறகு வதக்கிய பொருட்களுடன் சிறிதளவு உப்பு மற்றும் எடுத்துவைத்துள்ள சாஸ்கள், 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 8

veg american chop suey recipe in tamil

5 நிமிடத்திற்கு பிறகு கலந்து வைத்துள்ள சோள மாவு தண்ணீரை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து கீழே இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சாஸ் தயாராகிவிட்டது. நீங்கள் தயாரித்த இந்த சாஸை பொரித்து வைத்துள்ள நூடுல்ஸ் மேலே ஊற்றி விடுங்கள்.

ஸ்டேப்- 9

கடைசியாக 1 முட்டையை  வழக்கம் போல் ஆம்லெட் போட்டு அந்த ஆம்லெட்டை சாஸ் ஊற்றிய நூடுல்ஸ் மீது வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான அமெரிக்கன் ஸ்டைல் Chop Suey ரெடி. இந்த Chop Suey-யை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும்.

இதையும் படியுங்கள்⇒ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சில்லி கார்லிக் நூடுல்ஸ்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement