தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி?

Advertisement

பச்சரிசி மாவில் அதிரசம் செய்வது எப்படி? Athirasam Seivathu Eppadi Tamil

தீபாவளி பலகாரங்களில் முதலில் இடம் பெறுவது அதிரசம் தான்.. அதிரசத்தில் பல வகைகள் இருக்கின்றன. இருப்பினும் தீபாவளிக்கு பெரும்பாலும் அனைவரது வீட்டிலும்.. பச்சரிசி மாவில் தான் அதிரசம் செய்வார்கள்.. அதிரசம் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும்.. சாப்டாகவும் இருக்கும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிரசத்தை விரும்பி சாஃப்டாகவும்.. இந்த ரெசிபியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும் என்பதினால் வேலை அதிகமாக இருக்குமோ என்று நினைக்காதீர்கள்.. அதிரசம் மற்ற பலகாரங்களை செய்வதை விட மிக எளிமையாக.. சிறிது நேரத்திலேயே செய்து விடலாம். உங்களுக்கு அதிரசம் செய்ய தெரியாது என்றால் கலவையை விடுங்கள். இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. ஆம் இந்த தீபாவளிக்கு அதிரசம் செய்து அசத்த.. இங்கு அதற்கான செய்முறை விளக்கத்தை மிக தெளிவாக கொடுத்துள்ளோம்.. படித்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

அதிரசம் செய்வது எப்படி செய்யும் முறை

அதிரசம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 2 கப்
  2. வெல்லம் – 2 கப்
  3. பொடித்த ஏலக்காயம் – கால் டீஸ்பூன்
  4. நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  5. எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு
தீபாவளி ஸ்வீட் செய்வது எப்படி?

அதிரசம் செய்முறை:

பச்சரிசியை எடுத்து ஒரு அரைமணி நேரம் ஊற வையுங்கள்.

பின்னர் தண்ணீரை வடிகட்டி அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பாகு காச்சும் முறை:

அடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றி காய்ச்ச வேண்டும்.

வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி?

 

சரியாக பாகு வந்திருக்கிறதா? என்பதை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்றால், ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள்.

பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும். தேவைப்பட்டால் சிறிது சுக்குத்தூள் சேர்த்து கொள்ளலாம்.

இந்தப் பாகு, அரிசி மாவுக் கலவையை 7 – 8 மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.

8 மணி நேரம் கழித்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அவ்வளவுதான் அதிரசம் தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement