ஒரு வாரத்தில் 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க உதவும் அவல் தோசை செய்முறை..!

Aval Dosa Recipe in Tamil

அவல் தோசை செய்வது எப்படி?

Aval Dosa Recipe in Tamil – உடல் எடையை குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. அதாவது அவலை பயன்படுத்தி தோசை செய்து சாப்பிட்டு வருவதன் மூலம். உடல் எடையை ஒரே வாரத்தில் 5 கிலோ வரை குறைக்க முடியும். அது எப்படி என்பதை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். அதற்கு முன் அவல் பயன்களை பற்றி முதலில் பார்க்கலாம் வாங்க..

அவல் நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் சாப்பிடப்பட்டு வந்துள்ளது. அவல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் நிறம் அரிசியின் நிறத்தைச் சார்ந்தது. வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள். அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். அவல் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவாகும். உடலின் சூட்டைத் தணிக்கும், செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும். இந்த அவலில் நாம் தோசை செய்து சாப்பிடுவதன் மூலம் உடலில் எடையும் குறைய ஆரம்பிக்கும். சரி வாங்க அவல் தோசை முறையை இப்பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

அவல் தோசை செய்முறை – Aval Dosa Recipe in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. அரிசி – ஒரு கப்
  2. அவல் – 1/2 கப்
  3. உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
  4. சமையல் சோடா – 1/2 ஸ்பூன்
  5. உப்பு – தேவையான அளவு
  6. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை விளக்கம் – Aval Dosa Recipe in Tamil:

தோசை செய்வதற்கு முன்னதாகவே இட்லி அரிசி, அவல் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனி பாத்திரத்தில் தண்ணீருடன் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். ஊறவைத்த பொருட்களை தனி தனியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையுடன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

பிறகு மாவு பாத்திரத்தை மூடி 3 முதல் 4 மணி நேரம் வரை நன்கு புளிக்க வைக்கவும்.

நான்கு மணி நேரம் கழித்து இந்த மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் சமையல் செடல் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடேறியதும் பதமாக சுட்டெடுங்கள். பிறகு உங்களுக்கு பிடித்த சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்.

இவ்வாறு காலை மற்றும் இரவு நேரங்களில் அளவிடும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் போதும் ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடை குறைவதை நீங்களே உணரமுடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு முறை வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை செய்து பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil