கார்த்திகை பொரி செய்வது எப்படி? | Karthigai Pori recipe in Tamil
Aval Pori recipe in Tamil – ஹாய் நண்பர்களே வணக்கம் அனைவருக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.. இன்று கார்த்திகை தீபம் அனைவரது வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வீட்டில் அவல் பொரி எல்லாம் தயார் செய்து வீட்டில் பூஜை செய்வார்கள். உங்களுக்கு கார்த்திகை அன்று செய்யக்கூடிய கார்த்திகை பொரி செய்ய தெரியுமா.? அப்படி செய்ய தெரியாது என்றால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த கார்த்திகை பொரி செய்வது எப்படி என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- அவல் பொரி – 4 கப்
- பொட்டுக்கடலை – 4 ஸ்பூன்
- தேங்காய் – சிறிது சிறிதாக நறுக்கியது 4 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
- வெல்லம் – ஒரு கப் (பொரி அளந்த கப்பில் ஒரு கப்)
- நெய் – இரண்டு ஸ்பூன்
- தண்ணீர் – 1/4 கப்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி 1 கப் வேர்க்கடலை இருந்தால் போதும்..!
கார்த்திகை பொரி செய்முறை – Aval Pori recipe in Tamil:
அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதனோடு பொட்டுக்கடலை, தேங்காய் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு பவுலில் மாற்றி கொள்ளுங்கள்.
பிறகு அதே வாணலியில் ஒரு கப் வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்றாக கரைத்து கொள்ளுங்கள். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின் அந்த வாணலியை ஒரு முறை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் அந்த வாணலியில் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதனுடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறிவிடுங்கள்.
அதாவது வெல்லத்தின் பதமானது எப்படி அறிய வேண்டும் என்றால் ஒரு சின்ன தட்டில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள் அதில் காய்ச்சிய வெல்லத்தை சிறிதளவு ஊற்றி விடுங்கள். அப்படி ஊற்றும்போது அந்த வெல்லம் நன்கு உருண்டு வர வேண்டும். அப்படி வெல்லம் வந்தால் மட்டும் போதும் அடுப்பை அணைத்துவிடலாம்.
பிறகு அதில் பொரி மற்றும் பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பொரியை வெல்லத்தில் நன்றாக கிளறி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தான் கார்த்திகை பொரி தயாராகிவிட்டது. இந்த கார்த்திகைக்கு செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |