அவலில் இப்படி ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாமா..?

Advertisement

Aval Recipe in Tamil

ஹாய் நண்பர்களே..! ஈவ்னிங் வந்தாலே எல்லோருக்கும் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். பஜ்ஜி, போண்டா, வடை, முட்டை போண்டா மற்றும் சிப்ஸ் இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் இதுமாதிரியான ரெசிபிகளை மட்டும் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் அதிகமாக யாரும் அவல் ரெசிபி சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். ஆகையால் இன்றைய பதிவில் அவல் ரெசிபி பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.  உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அவல் ரெசிபி செய்வது எப்படி என்று இன்றைய பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ சுவையான மொறு மொறு சோயா கட்லெட் செய்ய தெரியுமா..?

அவல் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:

  1. அவல் – 1 கப் 
  2. கோதுமை மாவு – 1 கப் 
  3. வெல்லம் – 1/4 கிலோ
  4. தேங்காய் துருவல் – 1/2 கப் 
  5. எண்ணெய் – 200 கிராம் 
  6. ஏலக்காய் பவுடர் – 1/2 ஸ்பூன் 
  7. நெய் – 1 ஸ்பூன்
  8. உப்பு – 1/2 ஸ்பூன் 

அவல் ரெசிபி செய்முறை:

aval

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள கோதுமை மாவு, 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் நெய் இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல பிசைந்து 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1/4 கிலோ வெல்லம் மற்றும் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பவுடர் இரண்டையும் அதில் போட்டு நன்றாக வெல்லத்தை கரைய விடுங்கள்.

ஸ்டேப்- 3

வெல்லம் கரைந்த பிறகு 1 கப் அவல் மற்றும் 1/2 கப் தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து நன்றாக சிறிது நேரம் கலந்து பிறகு அடுப்பை அணைத்து விட்டு தயார் செய்த அவல் பூரணத்தை கீழே இறக்கி ஆறவிடுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்ததாக தயார் செய்த அவல் பூரணத்தை சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள. அதே போல பிசைந்த கோதுமை மாவிலும் உருண்டை பிடித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 200 கிராம் எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள். இப்போது உருண்டை பிடித்து உள்ள கோதுமை மாவை வடை போல தட்டி கொண்டு அதில் உருண்டை பிடித்துள்ள அவல் பூரணத்தை வைத்து மூடி விடுங்கள்.

ஸ்டேப்- 6

aval recepi seivadhu eppdi

எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்த அவல் ரெசிபியை அதில் போட்டு பொன் நிறமாக வந்ததும் எடுத்து விடுங்கள். இது மாதிரி ஒவ்வொன்றையும் செய்து எண்ணெயில் போட்டு எடுத்து விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான ஈவ்னிங் அவல் ரெசிபி தயாராகிவிட்டது. இது மாதிரி ஒரு நாள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

 

Advertisement