மாலை நேரத்தில் டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

aval urulaikilangu vadai recipe in tamil

Snacks Recipes in Tamil

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மாலை நேரத்தில் சூடான டீ குடிக்கும் போது காரமான ருசியான ஒரு ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இந்த ஸ்னாக்ஸ் செய்ய அதிக நேரம் தேவைப்படாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த அவல் உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நாவிற்கு சுவையூட்டும் காலிஃபிளவர் வடை

அவல் உருளைக்கிழங்கு வடை செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளை அவல் – 1 கப்
  2. உருளைக்கிழங்கு – 2
  3. வெங்காயம் – 2
  4. பச்சை மிளகாய் – 3
  5. கொத்தமல்லி – தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  7. சீரகத்தூள் – கால் ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. அரிசி மாவு – 4 ஸ்பூன்
  10. எண்ணெய் – தேவையான அளவு

அவல் உருளைக்கிழங்கு வடை செய்முறை:

செய்முறை -1

முதலில் ஒரு கப் வெள்ளை அவலை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

பின் 2 உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும். பின் இதில் கழுவி வைத்துள்ள வெள்ளை அவலை சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை -3

பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை -4 

பின்னர் மஞ்சள் தூள், சீரகத்தூள், அரிசி மாவு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை -5

பின் அதை உருண்டை பிடிக்க வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,  எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இதை அதில் போட்டு பொறிக்க வேண்டும்.

செய்முறை -6

உருளைக்கிழங்கு வடை பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே.. டீயுடன் சேர்த்து சாப்பிட கூடிய மிகவும் ருசியான மொறுமொறு அவல் உருளைக்கிழங்கு வடை தயார்..! நீங்களும் உங்கள் வீட்டில் மொறுமொறு அவல் உருளைக்கிழங்கு வடை செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்